கொரோனா வைரஸ் பரவத் தொடங்கின போது, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, `இந்த நோய் ஏழைகளுக்கு வராது. பணக்காரர்களுக்கானது இந்த வியாதி' என்றார். அதேபோல, `இன்னும் மூணு நாள்கள்ல, கொரோனா நம்மை விட்டு முற்றிலுமா ஒழிஞ்சுடும்' என்றார். பல்வேறு விமர்சனங்களுக்கு உள்ளான இந்த வார்த்தைகள், பின்னாள்களில் முற்றிலுமாக பொய்த்துப்போனது.

சாமானியன் தொடங்கி, அரசியலில் உயர் பொறுப்பில் இருப்பவர்கள்வரை, யாரையுமே கொரோனாவின் தாக்கம் விட்டுவைக்கவில்லை. தமிழகத்தில் மட்டும், சட்டமன்ற உறுப்பினர்கள் 8 பேர் மற்றும் 3 அமைச்சர்கள், 1 முன்னாள் அமைச்சர் சேர்த்து மொத்தம் 12 பேருக்கு இதுவரை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தப் பட்டியலில், இன்றைய தினம் இணைந்திருந்தது, தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூக்கு இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, சென்னை ராமா புரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். ஏற்கனவே, அவருடைய மனைவிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு அதே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
எம்.எல்.ஏ.க்கள் 

அதிமுக எம்.எல்.ஏ.க்கள், ரிஷிவந்தியம் தொகுதி வசந்தம் கார்த்திகேயன், செய்யூர் தொகுதி அரசு, செஞ்சி தொகுதி கே.எஸ். மஸ்தான்,சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி பகுதியின் சட்டமன்ற உறுப்பினரான ஜெ.அன்பழகன், பரமக்குடி தொகுதி சதன் பிரபாகர், ஸ்ரீபெரும்புதூர் தொகுதி பழனி, உளுந்தூர்பேட்டை குமரகுரு, கோவை தெற்கு தொகுதி அம்மன் அர்ச்சுனன் ஆகியோருக்கு, கடந்த தினங்கள்ல கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டது.


 அமைச்சர்களில், உயர் கல்வி துறை அமைச்சர் கே.பி. அன்பழகன், மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி ஆகியோருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இவை இல்லாம, முன்னாள் அமைச்சரான வளர்மதிக்கும் கடந்த சில தினங்களுக்கு முன் கொரோனா உறுதிசெய்யப்பட்டது. சென்ற மாதம், தி.மு.க வை சேர்ந்த எம்.எல்.ஏ. ஜெ. அன்பழகனுக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டிருந்தது. கொரோனாவோடு போராடிய அன்பழகன், அதனாலேயே உயிரிழக்கவும் செய்தார். கொரோனாவால் இந்தியாவில் இறந்த, முதல் சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன்தான்.

தமிழகத்தில்தான் கொரோனாவின் தாக்கம் இப்படியாக உள்ளது என்றில்லை. உலகம் முழுக்கவே, இதே நிலைதான். பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்ஸன், கொரோனாவோடு போராடி அதிலிருந்து மீண்டு வந்திருந்தார். ஈரானில், 24 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு, அவர்களில் இருவர் உயிரிழந்தனர். மற்றவர்கள், நோயிலிருந்து முழுவதுமாக மீண்டுவிட்டனர். இஸ்ரேலின் சுகாதாரத்துறை அமைச்சரேவும், கொரோனாவால் பாதிக்கப்பட்டு, பின் மீண்டுவந்தார். 

பிரேசிலின் பிரதமர் போல்சோனாரோவுக்கும், இப்போதுதான் கொரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட நபர்களிலேயே, அதிக விமர்சனத்துக்கு உள்ளது போல்சோனர்தான். ஏனெனில், அவர்தான் இறுதிவரை `கொரோனா என்றொரு தொற்றுக்கிருமியே இல்லையென கூறி, இது வெறும் ஃப்ளூதான் - இதற்கு இவ்வளவு முக்கியத்துவம் தேவையில்லை' எனக்கூறிவந்தார். அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் போல்சோனர் - இருவரும்தான் கொரோனாவை ரொம்ப கவனக்குறைவா சித்தரித்தவர்களா, அறிவியலாளர்கள் சொல்றாங்க. `கொரோனா சிகிச்சைக்குத் தரக்கூடாது' என WHO தடைவிதித்திருக்கும் ஹைட்ராக்ஸி க்ளோரோக்யூனைன் மாத்திரைக்கு, ட்ரம்ப்பிடம் விளம்பரம் செய்தது, இந்த போல்சோனர் தான்! இப்போது மருத்துவமனையில், சிகிச்சையில் இருக்கிறார் இவர்.

என்னதான் அரசியல் கட்சியினர், முக்கிய பொறுப்பிலிருக்கும் உலக தலைவர்கள் என எத்தனையோ பேரை கொரோனா பாதித்தாலும், கொரோனா பயப்படும் அளவுக்கான வியாதி இல்லை என உறுதியாகச் சொல்லலாம். ஏன்னா, இதோ போராடி மீண்டு வந்த வயதான மூத்த தலைவர்களும், இங்க இருக்காங்க. அப்படியான ஒருத்தர்தான், பிரின்ஸ் சார்லஸ். 71 வயதான இவர், கொரோனா தொற்று ஏற்பட்டு, நோயிலிருந்து மீண்டு வந்தவர். 

ஸ்பெய்ன் நாட்டின் பிரதமர் 63 வயதான கேரமன் கால்வோ என்ற பெண்மணியும், கொரோனாவிலிருந்து விரைந்து குணமானவர்களில் ஒருவர். 

இன்றைக்கு மிக மோசமான பாதிப்பையும், இறப்பையும் சந்தித்துக் கொண்டிருக்கும் அமெரிக்காவில், நியூயார்க் மாநில சட்டமன்றத்தின் உறுப்பினர்களுக்கெல்லாம் கொரோனா தொற்று ஏற்பட்டு, அதிலிருந்து குணமானவங்கதான்.

இப்படி உலகம் முழுக்க எத்தனையோ பேர் கொரோனாவால தாக்கப்பட்டு, முறையான சிகிச்சை மூலமா குணமடைந்திருக்காங்க. 

கொரோனாவை பொறுத்தவரைக்கும், தொற்று உறுதிசெய்யப்பட்ட பின்னர்தான் மாறனும்னு அவசியமில்ல... சுற்றியிருக்கும் அல்லது சமீபத்தில் தொடர்பிலிருந்த யாராச்சும் ஒருத்தருக்கு கொரொனா வந்துட்டாகூட, தங்களைத்தாங்களே ஒருத்தர் தனிமைப்படுத்திக்கிறது சிறப்பு. 

அப்படித்தான் இன்றைய தினம் கர்நாடக முதல்வர் எடியூரப்பா, தன்னை தானே தனிமைப்படுத்திக் கொண்டிருக்கிறார். ஜார்கண்ட்டில், முதல்வர் ஒருவரோடு தொடர்பிலிருந்து எம்.எல்.ஏ.ஒருவருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டவுடன், அம்மாநில முதல்வரும் தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொண்டார். அவ்வளவு ஏன்... நம்ம தமிழ்நாட்டு கொரோனா மருத்துவக்குழுவிலிருந்த ஐ.சி.எம்.ஆர். இயக்குநர் பிரதீப் கவுரும் அப்படித்தான் தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொள்ளப் போவதாக அறிவித்திருந்தார். இப்படி நிறையபேர், சில காலங்களுக்குத் தன்னைத்தானே தனிமைப்படுத்திகிட்டு, அதன்மூலமா தொற்று அபாயத்துலருந்து விலகியிருக்காங்க.

தனித்திருப்போம்,  விலகியிருப்போம், வீட்டிலிருப்போம் என்பதுதான் இப்போதைக்கு கொரோனாவுக்கான சிறந்த தடுப்பு வழியா இருக்கு! இருந்தாலும், அரசியல்வாதிகள் களப்பணியாளர்களாக மாறும்போது வீட்டிலிருப்பது என்பது இயலாத காரியமாகிவிடுகிறது. இப்படியான நேரத்துல, மாஸ்க் அணிவது - சமூக இடைவெளி கடைப்பிடிப்பதெல்லாம் ரொம்பவே முக்கியம். 

இன்று தி.மு.க. தலைவர் ஸ்டாலின் சொல்லியதைச் சொல்லி, இந்த வீடியோவை முடிக்க விரும்புகிறோம்! - `எப்போது, யாரால், எப்படி எனத் தெரியாத அளவுக்கு நோய்ப் பரவல் அதிகரித்திருப்பதால் அனைவருமே எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்!'

- பெ.மதலை ஆரோன்