டிக்டாக் மூலம் பல பெண்களின் வாழ்க்கையை, தன் கணவர் சீரழித்து வருவதாகப் பாதிக்கப்பட்ட மனைவி புகார் அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடலூர் மாவட்டம் மேலிருப்பு பகுதியைச் சேர்ந்த ராஜசேகர் - சுகன்யா தம்பதியினருக்குக் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்ற நிலையில், இவர்களுக்கு 3 வயதில் பெண் குழந்தை ஒன்று உள்ளது.

 Wife warns girls to be safe from her husband

இதனிடையே, ராஜசேகர் டிக்டாக் மூலம் அடிக்கடி வீடியோ வெளியிட்டு வந்தார். இதனால், அவருக்குப் பல பெண்களுடன் பழக்கம் ஏற்பட்டதாக அவரது மனைவி குற்றம்சாட்டினார்.

இது தொடர்பாக அங்குள்ள காவல் நிலையத்தில் அவர் புகார் அளித்த நிலையில், போலீசார் ராஜசேகரை எச்சரித்து அனுப்பி வைத்துள்ளனர்.

பின்னர், மீண்டும் அவர் டிக்டாக் மூலமாக நிறையப் பெண்களிடம் அறிமுகமாகி, பல பெண்களைத் திருமணம் செய்து, மோசடி செய்வதாக, அவரது மனைவி சுகன்யா புதிய புயலைக் கிளப்பினார். இதனால், அதிர்ச்சியடைந்த போலீசார், அந்த புகாரை ஏற்கவில்லை என்று கூறப்படுகிறது.

இதனையடுத்து, கடலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில், குழந்தையுடன் சென்ற சுகன்யா, தன் கணவர் மீது புகார் அளித்தார்.

 Wife warns girls to be safe from her husband

பின்னர், புகாரைப் பெற்றுக்கொண்ட போலீசார், வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொள்வதாக உறுதி அளித்தனர். இதனையடுத்து, அவர் அங்கிருந்து கிளம்பிச் சென்றார். 

இதனிடையே, டிக்டாக் மூலம் பல பெண்களின் வாழ்க்கையை, தன் கணவர் சீரழித்து வருவதாக, மனைவியே புகார் அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.