குடித்துவிட்டு தினமும் பிரச்சனை செய்த கணவன் பற்றி புலம்பிய பெண்ணை, ஆறுதல் கூறி தன் காம வலையில் பால்காரர் விழ வைத்துள்ளார்.

“காதல் எல்லாம் கள்ள சந்தையில் விற்பனைக்கு வந்துவிட்டது போலும்?!”

“கொலையும் செய்வாள் பத்தினி! பத்தினி செய்தாள் பரவாயில்லை, ஆனால்..?” என்று தான் கேட்கத் தோன்றுகிறது.

Girl tries to kill her husband with illicit boyfriend

கோவை மாவட்டம், மணியக்காரன்பாளையத்தைச் சேர்ந்த வெல்டர் குமார் - சங்கீதா தம்பதியினருக்கு, 3 குழந்தைகளும் உள்ளனர். 

மனைவி சங்கீதா, உடையாம்பாளையத்தில் உள்ள பெட்ரோல் பங்கில் வேலை பார்த்து வந்தார். 

இதனிடையே, வெல்டர் குமாருக்கு குடிப்பழக்கம் இருந்ததால், தினமும் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்து மனைவியுடன் தகராறில் ஈடுபடுவதாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாக, கணவன் - மனைவி இருவருக்கும் இடையே, அடிக்கடி பிரச்சனை எழுந்துள்ளது.

இந்நிலையில், சங்கீதா வீட்டிற்குத் தினமும் பால் ஊற்ற வரும் கோவை கொண்டயம்பாளையத்தைச் சேர்ந்த பிரபுவிடம், தனக்கு நேரும் அவலங்கள் பற்றி கவலையாகக் கூறி ஆறுதல் தேடி உள்ளார்.

இதனால், இவர்கள் இருவருக்கும் இடையில் நல்ல அறிமுகமாகி, நட்பாகப் பழகத் தொடங்கினர்.

பின்னர், தன் கணவரால் தன் வாழ்க்கை நாசமாகிவிட்டதாகவும், பிரபுவிடம் தினமும் சங்கீதா கூறி வந்துள்ளார். சங்கீதா தினமும் புலம்பும்போதெல்லாம், பிரபு தினமும் ஆறுதல் கூறியுள்ளார்.

இந்த பழக்கம், இந்த ஆறுதல் இருவருக்கும் இடையே நெருக்கத்தை அதிகரித்துள்ளது. இதனால், இவர்களுக்குள் கள்ளக் காதல் மலர்ந்துள்ளது. இதனால், இருவரும் தினமும் போனில் மணிக்கணக்கில் பேசி, தங்களது கள்ளக் காதலை வளர்த்துள்ளனர். 

அத்துடன், கணவர் வேலைக்குச் சென்ற நேரம் பார்த்து, இருவரும் சேர்ந்து ஊர் சுற்றுவதும், வெளியிடங்களுக்குச் சென்று அடிக்கடி தனிமையில் சந்தித்து, ரசித்து ரசித்து உல்லாசம் அனுபவிப்பதுமாக இருந்துள்ளனர்.

Girl tries to kill her husband with illicit boyfriend

இதனிடையே, கடந்த 3 மாதங்களுக்கு முன்பு கணவர் தன்னை அடித்துத் துன்புறுத்துவதாகக் கூறி, கணவரை விட்டு சங்கீதா பிரிந்துள்ளார். பின்னர், தன் குழந்தைகளுடன், தன் பெற்றோர் வீட்டிற்குச் சென்றுவிட்டார்.

இதனையடுத்து, குமார் தன் மனைவியை குடும்பம் நடத்த வரும்படி, அடிக்கடி சென்று தொந்தரவு செய்துள்ளார். இது தொடர்பாகப் பிரபுவிடம், சங்கீதா கூறி ஆலோசனை கேட்டுள்ளார். 

இதனால், தங்களது கள்ளக் காதலுக்கு கணவர் இடையூறாக இருப்பதை உணர்ந்த சங்கீதாவும், பிரபுவும் குமாரை கொலை செய்ய திட்டமிட்டனர்.

அதன்படி பிரபுவும், சங்கீதாவும் சேர்ந்து குமார் வீட்டிற்கு நேற்று சென்றுள்ளனர். அங்கு, குமார் குடிபோதையில் தூங்கிக்கொண்டிருந்தார். அப்போது, இருவரும் குமாரின் கழுத்தில் கத்தியை வைத்து கழுத்தை அறுத்து கொலை செய்ய முயன்றுள்ளனர்.

இதில், கழுத்தில் படுகாயங்களுடன், தப்பி வீட்டை விட்டு சத்தம் போட்ட படியே குமார், வெளியே ஓடி வந்துள்ளார். குமாரின் அலறல் சத்தம் கேட்டு, அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வந்துள்ளனர். ஆனால், அதற்குள் கள்ளக் காதல் ஜோடி, அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர்.

பின்னர், ரத்த காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ள குமாரை மீட்டு, அருகில் உள்ள கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், விசாரணை மேற்கொண்டனர். அப்போது, மனைவியே தன் கள்ளக் காதலனுடன் சேர்ந்து கணவரைக் கொலை செய்ய முயன்றது தெரியவந்தது. இதனையடுத்து, தலைமறைவான சங்கீதா, பிரபுவை போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

இதனிடையே, கணவனைப் பற்றி புலம்பிய பெண்ணுக்கு ஆறுதல் கூற சென்று, தன் காம வலையில் விழவைத்த பால்காரர், கள்ளக் காதலுக்கு இடையூறாக இருப்பதாக மனைவியை வைத்தே, கணவனைக் கொலை செய்ய முயன்ற சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.