பிளாஸ்மா தெரபி என்றால் என்ன? அது கொரோனாவை குணப்படுத்துமா? என்பது பற்றி தற்போது பார்க்கலாம்...

“பிளாஸ்மா தெரபி” என்னும் வார்த்தையைப் பலரும் முதன் முறையாகக் கூட கேள்விப்படலாம். பலர், இதற்கு முன்பு கேள்விப்பட்டிருந்தாலும், அது குறித்த புரிதல் இல்லாமல் இருக்கலாம். அதுபற்றிய ஒரு சில அடிப்படையான தகவல்களை தற்போது பார்க்கலாம்.

what is plasma therapy coronavirus treatment

கொரோனாவுக் உலகமே அஞ்சி நடுங்கும் வேளையில், இன்னும் மருந்து கண்டுப்பிடிக்க முடியவில்லை. இதனால், தற்போது இருக்கும் சிகிச்சை முறைகளை மட்டுமே சிலர் பின்பற்றி வருகின்றனர். மேலும், இன்னும் சில சிகிச்சை முறைகளைக் கையாண்டு, நோயாளிகளைக் குணமாக்கி வருகின்றனர்.

அதன்படி, இந்தியாவில் சமீபத்தில் 49 வயதான கொரோனா தொற்று நோயாளி ஒருவருக்கு, “பிளாஸ்மா தெரபி” மேற்கொள்ளப்பட்ட நிலையில், அவர் தற்போது குணமாகியுள்ளார். 

what is plasma therapy coronavirus treatment

“பிளாஸ்மா தெரபி” முறையைப் பயன்படுத்த இந்திய மருத்துவ ஆராய்ச்சி மையம் அனுமதி அளித்துள்ளது. இதனைத்தொடர்ந்து, கேரளா, குஜராத், பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் இந்த முறை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதனால், “பிளாஸ்மா தெரபி” குறித்த தேடல், பொதுமக்கள் மத்தியில் பரவத்தொடங்கி உள்ளது.

“பிளாஸ்மா” என்பது, ரத்த அணுக்களை ஏந்திச் செல்லும் நிறம் அற்ற திரவம். இந்த சிகிச்சை முறையில், முழுமையாகக் குணமடைந்த ஒரு கொரோனாநோயாளியிடமிருந்து, ஒரு கொரோனா வைரஸ் நோயாளிக்கு “பிளாஸ்மா” மாற்றி அமைக்கப்படும். 

what is plasma therapy coronavirus treatment

அதாவது “பிளாஸ்மா தெரபியில்” கொரோனா வைரசிலிருந்து மீட்ட நோயாளியின் ரத்தத்திலிருந்து, சில முறைகளைப் பயன்படுத்தி கொரோனா நோயாளிக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதனால், கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவருக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதோடு, ரத்த அணுக்களும் இயல்பாகவே அதிகரிக்கும். இதன் மூலம், கொரோனாவை எதிர்த்துப் போராட உடல் தானாகவே தயாராகிறது.

குறிப்பாக, “பிளாஸ்மா தெரபி” ரத்த தானம் செய்வது போன்றுதான் செய்யப்படுகிறது. ரத்த தானத்திற்கு ஆகும் அதே நேரமே, இந்த “பிளாஸ்மா தெரபி”க்கும் ஆகும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 

இன்னும் குறிப்பாக, “பிளாஸ்மா தெரபி” முறையில், ஒரு டியூப் போல் இருவரின் நரம்புகளிலும் செலுத்தப்பட்டுப் பாதிக்கப்பட்டவர் உடலில் பிளாஸ்மா நீக்கப்பட்டு பின், ரத்த அணுக்கள் செலுத்தப்படுகிறது. இது, ரத்த தானம் போல் ஒரு முறை அல்லாமல், வாரத்தில் 2 அல்லது 3 முறை இந்த பிளாஸ்மா தெரப்பி முறை செய்யப்படுகிறது. 

இதற்கு கொரோனாவில் இருந்து மீண்ட 2 பேர், பாதிக்கப்பட்டவருக்கு உதவ வேண்டியிருப்பதாக மருத்துவர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.