மனைவியை வெட்டிவிட்டுப் பயந்துபோன கணவர் தற்கொலை செய்துகொண்டார். 

விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அடுத்த வடக்கநந்தல் பகுதியைச் சேர்ந்த சீனிவாசன், அப்பகுதியில் லாரி ஓட்டுநராக வேலை செய்து வந்தார். இவருக்குத் திருமணமாகி பாரதி என்ற மனைவி இருக்கிறார்.

man suicide after stabbing wife

சீனிவாசன், தினமும் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்து மனைவி பாரதியிடம் சண்டை போடுவது தினமும் நடக்கும் வழக்கான ஒரு விசயமாக இருந்துள்ளது. இந்நிலையில், இன்று வழக்கம்போல் குடித்துவிட்டு வந்த சீனிவாசன், எப்போதும் போல் மனைவியிடம் சண்டைபோட்டு அவரை அடித்துள்ளார்.

இதனால், வெறுத்துப்போன அவருடைய மனைவி பாரதி, அவரை கடுமையாக எச்சரித்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த அவர், வீட்டிலிருந்த அறுவாளை எடுத்து, பாரதியை வெட்டி உள்ளார். இதில், அவருக்கு ரத்தம் வரவே, பயந்துபோன அவர், வீட்டிற்குச் சென்று தூக்கில் தொங்கி தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

இது குறித்து அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்ததையடுத்து, விரைந்து வந்த போலீசார், ரத்த வெள்ளத்தில் கிடந்த பாரதியை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும், சீனிவாசன் உடலைக் கைப்பற்றி, பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

அத்துடன், இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், சீனிவாசன் தற்கொலை செய்துகொண்டது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.