உத்தரப்பிரதேசத்தில் ஒரே நேரத்தில் 2 காதலிக்கு, காதலன் அடுத்தடுத்து தாலி கட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஒருவருக்கு அதிஷ்டம் எப்படி வேண்டுமானாலும் வரும் என்பதற்கு, இந்த சம்பவம் ஒரு உதாரணம். பொய் சொன்னால், ஏமாற்றினால், சினிமா பாணியில்.. “கண்ணா 2 லட்டு திண்ண ஆசையா?!” என்பது போலவே, ஒரு ஆச்சரியமான சம்பவம் நிகழ்ந்துள்ளது.

Uttar Pradesh youth marries two girls

உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர், ஒரே நேரத்தில் 2 பெண்களை காதலித்து வந்துள்ளார். அந்த 2 பெண்களிடம் பேசுவதற்கு தனித்தனியாக சிம் கார்ட் பயன்படுத்தி பேசி வந்துள்ளார். 

அதேபோல், காலையில் ஒரு காதலியையும், மாலையில் ஒரு காதலியையும் சந்திப்பதை வழக்கமாக கொண்டிருந்தார். 

இப்படி, ஒரே நேரத்தில் 2 பெண்களை காதலித்து வந்ததால், இந்த காதல் மன்னன், ஒரு நாள் கையும் களவுமாக ஒரே நேரத்தில் 2 பெண்களிடம் மாட்டிக்கொண்டுள்ளார்.

இதனையடுத்து, 2 பெண்களும் காதலன் யாருக்கு என்று அடித்துக்கொண்டு சண்டைப் போட்டுள்ளனர். அப்போது, இருவரையும் சமாதனம் செய்ய முயன்ற காதலன், சமாதானம் செய்ய முடியாமல் திணறிப்போனான்.

Uttar Pradesh youth marries two girls

இதனால், இருவரையும் திருமணம் செய்ய சம்மதம் தெரிவித்தான். இதற்கு 2 காதலிகளும் ஒற்றுக்கொண்டனர். 

அதன்படி, அங்குள்ள கோயிலுக்கு அழைத்துச் சென்று இருவரையும் அருகில் நிற்க வைத்து, இருவருக்கும் அடுத்தடுத்து தாலி கட்டினார். இந்த காட்சியை கோயிலுக்கு வந்தவர்கள் பார்த்து, அதிர்ந்துப் போனார்கள்.

இந்த காட்சியை சிலர் வீடியோவாகவும் எடுத்து, இணையத்தில் வெளியிட்டனர். 

மேலும், இந்த திருமணத்திற்கு 3 பேரின் பெற்றோர்களும் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். இதனால், 2 மனைவிகளையும் எங்கே அழைத்துச் செல்வது என்று தெரியாமல், அந்த இளைஞன் தடுமாறி வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இவ்வளவு விழிப்புணர்வு உள்ள இந்த காலத்திலும், ஒரே நேரத்தில் 2 காதலிக்கு, காதலன் அடுத்தடுத்து தாலி கட்டிய சம்பவம் உத்தரப்பிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.