அமெரிக்காவில் டிக்டாக் செயல்பட ட்ரம்ப் திடீர் அனுமதி!

அமெரிக்காவில் டிக்டாக் செயல்பட ட்ரம்ப் திடீர் அனுமதி! - Daily news


தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல், தனிநபர் தகவல் திருட்டு ஆகியவற்றால் அமெரிக்காவில் டிக் டாக் செயலியைத் தடை செய்வோம் என்று அதிபர் ட்ரம்ப் ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் அறிவித்தார்.

அதேசமயம், சீனாவின் பைட்டான்ஸ் நிறுவனத்தின் செயலியான டிக் டாக்கை, அமெரிக்காவின் மைக்ரோசாஃப்ட் நிறுவனம் வாங்கத் திட்டமிட்டு இருப்பதாகவும் அதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவித்தன.

கடந்த ஜூலை மாதத்தில், இந்திய அரசு தேசிய பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு காரணங்களுக்காக மத்திய அரசு, டிக்டாக் உள்ளிட்ட 59 சீன செயலிகளை தடை செய்திருந்தது. மேலும் ராணுவத்தில் பணிபுரிபவர்களுக்கு மட்டுமென்று கூறி, அங்கும் சில செயலிகளுக்குத் தடைவிதிக்கப்பட்டது. தொடர்ச்சியாக அரசு சார்பில் செயலிகள் மீதான தடைகள் விதிக்கப்பட்டது குறித்து, பலரும் விமர்சனங்கள் வைத்திருந்தனர்.

இதுபற்றி நிகழ்ச்சியொன்றில் பேசிய இந்திய அமைச்சர், ``இந்தியர்களின் தரவுகளை வெளிநாட்டினர் திருட அனுமதிக்க முடியாது என்றும், அரசு அதன் இறையாண்மையில் ஒருபோதும் சமரசம் செய்து கொள்ளாது" என்று கூறியிருந்தார். நாடாளுமன்றத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட குழுவால் ஆராயப்பட்டு, தரவுகள் பாதுகாப்பு சட்டத்தை மத்திய அரசு கொண்டு வருகிறது என்று கூறியிருந்தார்.

சீன செயலிகளை அதிகம் பயன்படுத்தும் நாடுகளில், இந்தியா தான் முதலிடத்தில் உள்ளது. அதற்கு அடுத்த இடத்தில் இருப்பது அமெரிக்காதான். அமெரிக்காவின் வெளியுறவுத்துறைச் செயலர் மைக் பாம்பியோ, இதை தனது பேட்டியொன்றில் கூறியிருக்கிறார். தங்களின் அதிகாரிகளோடு கலந்தாலோசித்த பின், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இந்த கருத்தைத் தெரிவிப்பார் எனக்கூறியிருக்கிறார் மைக்.
 
ட்ரம்ப், கொரோனா வைரஸ் பரவுதல் விஷயத்தில், ஏற்கெனவே சீனா மீது கடுமையான விமர்சனங்களை வைத்து வந்தது, அனைவரும் அறிந்த விஷயம். சீனாவும், உலக சுகாதார நிறுவனமும் சேர்ந்துதான் கொரோனா பற்றிய விவரங்களை மறைத்துவிட்டதாகவும், அதனால்தான் இன்று அமெரிக்கா இவ்வளவு மோசமான பாதிப்புகளை சந்திப்பதாகவும் கூறியிருந்தார் ட்ரம்ப். இதை அடிப்படையாக சொல்லி, அமெரிக்கா உலக சுகாதார நிறுவனத்துக்கு தரும் நிதியையே நிறுத்தியவர் ட்ரம்ப். அந்த அளவுக்கு சீனாவுடன் முரண்பட்டிருக்கும் ட்ரம்ப், இந்த செயலிகள் விஷயத்திலும் அவர்களுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்கக்கூடும் என கணிக்கிறார்கள் சிலர்.

இதைத்தொடர்ந்து, டிக்-டாக் செயலியை அமெரிக்க நிறுவனத்துக்கு செப்டம்பர் 15-ந் தேதி விற்க வேண்டும் அல்லது தடை உத்தரவு அமலுக்கு வரும் என்று தெரிவித்தார் ட்ரம்ப். இதையடுத்து டிக்-டாக் செயலியை வாங்க ஆரக்கிள், மைக்ரோசாப்ட், வால்மார்ட் ஆகிய நிறுவனங்கள் பேச்சு வார்த்தை நடத்தின. இதில் மைக்ரோசாப்ட் நிறுவனம் விலகியது.

ஆரக்கிள் நிறுவனம் பைட்டான்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தத்துக்கு மேற் கொண்டது. ஆனால் இந்த ஒப்பந்தத்தை அனுமதி அளிக்க முடியாது என்று டிரம்ப் தெரிவித்தார். பெரும்பாலான பங்கு பைடான்ஸ் நிறுவனத்திடம் இருப்பதால் ஏற்க முடியாது என்றார். இதனால் இன்று முதல் அமெரிக்காவில் டிக்-டாக் மற்றும் வீ சாட் செயலிகளுக்கு தடை விதிக்கப்படுவதாக டிரம்ப் நிர்வாகம் தெரிவித்து இருந்தது.

இந்த நிலையில் டிக்-டாக் செயலிக்கு திடீரென அனுமதி வழங்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. டிக்-டாக் செயலி மீதான தடையை ஒருவாரத்துக்கு தள்ளி வைப்பதாக வர்த்தக துறை இன்று அறிவித்திருந்த நிலையில் ஆரக்கிள் மற்றும் வால்மார்ட் நிறுவனத்துடன் டிக்-டாக் செய்து கொண்ட ஒப்பந்தத்தில் முன்னேற்றம் ஏற்பட்டு இருப்பதாகவும், இதனால் தடை தள்ளி வைக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இதற்கிடையே தற்போது டிக்-டாக் செயலிவுடன் ஆரக்கிள் மற்றும் வால்மார்ட் நிறுவனங்கள் செய்து கொண்ட ஒப்பந்தத்துக்கு டிரம்ப் ஆதரவு அளித்து உள்ளார். இதுகுறித்து அவர் கூறும் போது, ‘டிக்-டாக் செயலியுடன் ஆரக்கிள், வால்மார்ட் நிறுவனங்கள் செய்து கொண்ட ஒப்பந்தத்தின்படி அமெரிக்காவில் டிக்-டாக் குளோபல் என்ற புதிய நிறுவனம் தொடங்கப்படும். இந்த ஒப்பந்தத்துக்கு எனது ஆதரவு உண்டு’ என்றார்.

இந்த புதிய நிறுவனத்தில் பெரும்பாலும் அமெரிக்கர்கள் இயக்குனர்களாக இருப்பார்கள். ஒரு அமெரிக்க நிர்வாக இயக்குனர் மற்றும் பாதுகாப்பு நிபுணரும் இருப்பார்கள். மேலும் டிக்-டாக்கின் தகவல்கள் ஆரக்கிள் நிறுவனத்தால் சேகரித்து வைக்கப்படும்

Leave a Comment