இன்று முதல் செயல்படும் தொழிற்சாலைகளுக்கான வழிமுறைகளைத் தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, 40 நாட்கள் ஊரடங்கு நேற்று முதல் முடிவடைந்த நிலையில், இன்று முதல் வரும் 17 ஆம் தேதி வரை, 3 வது முறையாக ஊரடங்கு உத்தரவு நீட்டிகக்ப்பட்டள்ளது.

TN govt guidelines for industries corona lockdown

ஆனாலும், பொதுமுடக்க காலத்தில் நடைமுறையில் இருந்து சில கட்டுப்பாடுகளை நீக்கி, சி விசயங்களுக்குத் தளர்வுகளும் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இன்று முதல் செயல்படும் தொழிற்சாலைகளுக்கான வழிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அது என்னவென்று தற்போது பார்க்கலாம்.

- தொழிற்சாலைகள், தகவல்தொழில்நுட்ப நிறுவனங்கள், கட்டுமான பணிகளுக்கும் இணையதளத்தில் விண்ணப்பித்து அனுமதி பெற வேண்டும். 

- சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள், கிராமப்புற தொழில்கள், தனிக்கடைகள் செயல்பட அனுமதி தேவையில்லை.

- சென்னையில் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் ஊரடங்கு முழுமையாகக் கடைப்பிடிக்கப்படும். 

- பிளம்பர், எலக்ட்ரீசியன், ஏசி மெக்கானிக் உள்ளிட்ட பணியாளர்கள் அனுமதி பெறும் வகையில் சிறப்ப இணையதளம் அறிவிக்கப்பட்டுள்ளது. 

TN govt guidelines for industries corona lockdown

- அதன்படி, http://tnepass.tnega.org என்ற இணையதளத்தில், அனுமதி பெறலாம்  என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

- நாள்தோறும் 2 முறை கிருமிநாசினி கொண்டு பணியிடங்களைச் சுத்தம் செய்ய வேண்டும் என்றும், வலியுறுத்தப்பட்டுள்ளது. 

- கழிப்பறைகளை ஒவ்வொரு மணி நேரத்திற்கும் சுத்தம் செய்ய வேண்டும் என்றும், அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

- 200 தொழிலாளர்களுக்கு மேல் பணிபுரியும் தொழில் நிறுவனங்களில் மருத்துவர் இருக்க வேண்டும் என்றும், தமிழக அரசு வலியுறுத்தி உள்ளது.

இந்த வழிமுறைகளை முறையாகப் பின்பற்றி, தொழிற்சாலைகளை நடத்திக்கொள்ளலாம் என்று தமிழக அரசு அனுமதி வழங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.