பெண் பேராசிரியரைக் காதலித்து உல்லாசம் அனுபவித்துவிட்டு, கலட்டிவிட்ட ஆண் பேராசிரியர் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார். 

தஞ்சாவூர் பர்மா காலனி சாலையைச் சேர்ந்த 28 வயதான சுமதியும், தஞ்சை கரந்தை பகுதியைச் சேர்ந்த 29 வயதான அஸ்வின்ராஜ் ஆகிய இருவரும், அங்குள்ள தனியார் கல்லூரியில் பேராசிரியர்களாக பணியாற்றி வருகின்றனர்.

Thanjavur professor arrested for cheating

இதனிடையே, பேராசிரியர் அஸ்வின்ராஜ், சுமதிக்கு நூல் விட, அவரும் காதல் வலையில் விழுந்துள்ளார். இதனையடுத்து, இருவரும் நெருக்கமாகப் பழகி, காதலித்து வந்துள்ளனர்.

இதனால், இருவரும் அடிக்கடி வெளியில் சென்று வந்துள்ளனர். குறிப்பாக அஸ்வின்ராஜ், திருமணம் செய்துகொள்வதாகக் கூறி, பலமுறை சுமதியுடன் உல்லாசம் அனுபவித்துள்ளார்.

பல மாதங்கள் இவர்களது காதல், உல்லாச காதலாக உலா வந்த நிலையில், தன்னை திருமணம் செய்துகொள்ளச் சுமதி தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளார்.

Thanjavur professor arrested for cheating

ஒருகட்டத்தில் கோபமடைந்த அஸ்வின்ராஜ், சுமதிக்குக் கொலை மிரட்டல் விடுத்து, அவரை கலட்டிவிட்டுள்ளார்.

இதனால், கடும் அதிர்ச்சியடைந்த சுமதி, வல்லம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அஸ்வின்ராஜ் மீது பாலியல் புகார் அளித்துள்ளார். 

மேலும், திருமணம் செய்துகொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி, என்னிடம் பலமுறை உல்லாசம் அனுபவித்துவிட்டு, தற்போது திருமணம் செய்யாமல் கொலை மிரட்டல் விடுப்பதாகவும் குற்றம்சாட்டினார்.

இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், அஸ்வின்ராஜை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.