தமிழகத்தில் சூழ்நிலையைப் பொறுத்து, கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்படும் என்று முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் பொருளாதார வளர்ச்சியை மீட்டெடுக்கும் நடவடிக்கையாக, இந்திய தொழில் கூட்டமைப்பு சார்பில் 'ஒளிரும் மாநாடு' நடத்தப்படுகிறது. இந்த மாநாட்டை முதலமைச்சர் பழனிசாமி காணொலி காட்சி மூலம் இன்று தொடங்கி வைத்தார்.

Tamil Nadu new lockdown relaxations CM Edappadi

அப்போது பேசிய முதலமைச்சர் பழனிசாமி, “கொரோனாவால் வாழ்க்கை முறை மாறியிருக்கிறது” என்று குறிப்பிட்டார்.

“இயல்பு நிலையை நோக்கி தமிழகம் முன்னேறுகிறது என்றும், தமிழகத்தில் தொழில் வளர்ச்சிக்கு அரசு முன்னுரிமை அளித்து வருகிறது” என்றும், முதலமைச்சர் பழனிசாமி கூறினார்.
 
மேலும், “தமிழகத்தில் சூழ்நிலையைப் பொறுத்து, கூடுதல் தளர்வுகள் விரைவில் அறிவிக்கப்படும்” என்றும் முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்தார். 

அத்துடன், “தமிழக தொழிலாளர்களை பயன்படுத்தி, தொழில்துறை இயல்பு நிலைக்குத் திரும்ப நடவடிக்கை எடுக்கப்படும்” என்றும் முதலமைச்சர் பழனிசாமி உறுதி அளித்தார்.

Tamil Nadu new lockdown relaxations CM Edappadi

குறிப்பாக, “பணியாளர்கள் உடல் நலம், பணி பாதுகாப்பை நிறுவனங்கள் உறுதி செய்ய வேண்டும் என்றும், சென்னையில் பாதிப்பு அதிகமாக இருப்பதால் தளர்வுகள் கூடுதலாக அறிவிக்கப்படவில்லை” என்றும் முதலமைச்சர் பழனிசாமி கூறினார்.

இதனிடையே, “10,11,12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் ஜூலை 3 வது வாரத்தில் வெளியிடப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.