சேலத்தில் சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்ட இளமதி பெற்றோருடன் செல்ல விருப்பம் தெரிவித்துள்ளதாக அவரது வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

ஈரோடு மாவட்டம் பவானி அடுத்துள்ள தர்மபுரி கிராமத்தைச் சேர்ந்த செல்வன், அந்த பகுதியில் உள்ள குருப்பநாயக்கன் பாளையத்தைச் சேர்ந்த இளமதி ஆகிய இருவரும் கடந்த சில ஆண்டுகளாகக் காதலித்து வந்த நிலையில், இவர்களது காதலுக்கு இரு வீட்டாரின் பெற்றோர்களும் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.

salem ilamathi wants to go back to parents

இதனால், இருவரும் வீட்டை விட்டு வெளியேறிய நிலையில், இருவருக்கும் திராவிடர் விடுதலை கழகத்தைச் சேர்ந்த ஈஸ்வரன் முன்னின்று திருமணம் செய்து வைத்தார்.

இதனையடுத்து, அன்று இரவு புது மணத் தம்பதிகள் இருவரும், சேலம் மாவட்டம் கொளத்தூர் அடுத்துள்ள காவலாண்டியூரில் உள்ள ஈஸ்வரன் வீட்டில் தங்கியுள்ளனர்.

அப்போது, சுமார் 10 க்கும் மேற்பட்ட கார்கள், இருசக்கர வாகனங்களில் வந்த சுமார் 50 பேர் கொண்ட கும்பல், வீடு புகுந்து ஈஸ்வரன் மற்றும் செல்வன் ஆகிய இருவரையும் கடுமையாகத் தாக்கிவிட்டு, இளமதியை கடத்திச் சென்றதாகக் கூறப்பட்டது. 

காலை விடிந்ததும் இந்த தகவல் ஊர் முழுக்க பரவியதால், திராவிடர் விடுதலை கழகத்தினர் பெருமளவில் சேலம் மாவட்டம் கௌத்தூர் காவல் நிலையம் முன்பு திரண்டனர்.

salem ilamathi wants to go back to parents

அப்போது, இளமதியை காவல் நிலையத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.

இந்நிலையில், கடத்தப்பட்டதாகக் கூறப்பட்ட இளம் பெண் இளமதி, தனது வழக்கறிஞர் சரவணன் உடன் மேட்டூர் காவல் நிலையத்தில் இன்று ஆஜரானார். அவரிடம் போலீசார் தனிப்பட்ட முறையில் விசாரணை நடத்தியதாகத் தெரிகிறது.

அப்போது, “இளமதி, தன்னுடைய பெற்றோருடன் செல்ல விரும்புவதாக” அவரது வழக்கறிஞர் சரவணன் கூறியுள்ளார். இதனை தொடர்ந்து, அடுத்த என்ன செய்வது என்று போலீசார் ஆலோசனை நடத்தினர்.

salem ilamathi wants to go back to parents

ஆனால், தற்போது “சாதி மறுப்பு திருமணம் செய்த இளமதியை கடத்தியதாக தி.வி.க. தலைவர் கொளத்தூர் மணி மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர் என்றும், இளமதியை திருமணம் செய்த செல்வன் உள்பட 4 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து ஈரோடு பவானி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்” என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனால், அங்குப் பரபரப்பும், பதற்றமும் ஏற்பட்டுள்ளது.