சேலம் மாவட்டத்தில் வளர்ச்சித் திட்டப் பணிகள் செய்யப்பட்டு வருகிறது. அதை ஆய்வுசெய்ய வந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களைச் சந்திப்பில்  , “ 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் மிகப் பெரிய ஊழல். தமிழ்நாட்டின் பட்ஜெட் அளவுக்கு பெரியது. ரூ.1.76 ஆயிரம் அளவில் கொள்ளையடித்த கட்சி தி.மு.க. அப்போது காங்கிரஸ் காங்கிரஸ் கட்சியே இதில் நடவடிக்கை எடுத்தது. ஆனால் இவர்கள் தற்போது அ.தி.மு.க அரசின் மீது ஊழல் குற்றச்சாட்டுகளைச் சுமத்துகிறார்கள் ” என்றார்.


முதல்வர் எடப்பாடியின் குற்றச்சாட்டுகளுக்கு நேற்று  மாலையில் தி.மு.கவின் தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் அக்கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் ஆ. ராசா செய்தியாளர்களைச் சந்தித்து பதிலளித்தார். அப்போது முதல்வர் எடப்பாடியின் குற்றச்சாட்டுகளை எதிர்த்து பல கேள்விகள் கேட்டார். மேலும் ஊழல் குற்றச்சாட்டில் தி.மு.கவில் இதுவரை யாரும் தண்டிக்கப்பட்டதில்லை என்றும் அ.தி.மு.கவில்தான் தண்டிக்கப்பட்டிருக்கிறார்கள் என்றும் கூறினார்.


மேலும் ஆ.ராசா அவர்கள் தெரிவித்தது, ‘’ ஜெயலலிதா ஊழல் குற்றச்சாட்டில் நிருபிக்கப்பட்டு 4 ஆண்டுகள் தண்டிக்கப்பட்டது மட்டுமல்லாமல், 100 கோடி ரூபாயை அவரது சொத்திலிருந்து வசூலிக்க வேண்டுமென்று தீர்ப்பளிக்கப்பட்டது. ஆனால், 2 ஜி வழக்கில் ஆ. ராசா மேல் முறையீட்டிற்குச் செல்லவில்லை. ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளான எந்த அமைச்சரும் தான் செய்தது சரி என சொன்னதில்லை. நீதிமன்றங்களில் நானே கூண்டேறி 14 நாட்கள் வாதிட்டேன். 2 ஜி வழக்கில் 7 ஆண்டு காலங்களில் யாரும் சாட்சிகளை கொண்டு வரவில்லை என நீதிபதியே குறிப்பிட்டார். 


தி.மு.க. விஞ்ஞான ரீதியாக ஊழல் செய்ததாக சர்க்காரியா கமிஷனில் குறிப்பிட்டிருப்பதாக அவரும் அவரது கட்சியினரும் தொடர்ந்து சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள். 2 ஜி உட்பட ஏதாவது ஒரு குற்றச்சாட்டில், குற்றம் நிரூபிக்கப்பட்டிருக்குமானால் நாளையோ, நாளை மறுநாளோ அல்லது ஒரு வாரத்திலோ கோட்டையில், எல்லா ஊடகங்கள் முன்னிலையில், 2 ஜி, சர்க்காரியா ஆகியவற்றைப் பற்றியெல்லாம் எடப்பாடி என்னுடன் விவாதிக்க எடப்பாடி தயாரா? மேலும் ஜெயலலிதா நீதிமன்றம் ஏன் சென்றார், தண்டனை அனுபவித்தார் என்பதை பற்றியும் விவாதிக்க  தயாரா? இதை ஒரு சவாலாக எடப்பாடி விடுகிறேன்” என்றார். 

.