புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் 4 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த இளைஞரை, போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

வறண்ட பூமி, கருடு முரடான மனிதர்கள் என்பதற்குப் பெயர் போனது புதுக்கோட்டை மாவட்டம். கடந்த ஆண்டு கூட, சாதி கலவரம் பெரிய அளவில் எழுந்து அடங்கியது.

Pudhukottai youth arrested sexual harassment

அப்படிப்பட்ட மண்ணில் தொடர்ந்து வரிசைக் கட்டி நிற்கிறது பாலியல் பலாத்கார வழக்குகள். 

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி கலைஞர் காலனியைச் சேர்ந்த 28 வயதான ராஜாங்கம், அப்பகுதியில் ஆஸ்பெட்டாஸ் சீட் அமைக்கும் வேலை செய்து வந்தார்.

இதனிடையே, இவரது வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருந்த அப்பகுதியைச் சேர்ந்த 4 வயது சிறுமியைப் பார்த்த ராஜாங்கம், சிறுமியிடம் எதைப் பார்த்தான் என்று தெரியவில்லை. 

அப்போது சிறுமியிடம் கிட்டே சென்று, கடையில் மிட்டாய் வாங்கி கொடுத்து, சிறுமியை அப்பகுதியில் உள்ள மறைவான இடத்திற்கு அழைத்துச் சென்றுள்ளான்.

Pudhukottai youth arrested sexual harassment

அங்குச் சென்றதும், சிறுமி என்றும் பாராமல், பாலியல் துன்புறுத்தல் செய்துள்ளான். இதில், வலி தாங்க முடியாமல் சிறுமி அலறி துடிக்கவே, அக்கம் பக்கத்திலிருந்தவர்கள் ஓடிவந்து, சிறுமியை மீட்டுள்ளனர். 

இதனையடுத்து, அங்கிருந்து ராஜாங்கம் தப்பி ஓடியுள்ளான். பின்னர், தனக்கு நேர்ந்த அவலங்கள் குறித்து சிறுமி, தனது பெற்றோரிடம் கூறி உள்ளார். இதனால், அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர், அங்குள்ள ஆலங்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இது தொடர்பாக வழக்கப் பதிவு செய்த போலீசார், தலைமறைவாக இருந்த ராஜாங்கத்தை, போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். பின்னர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.

இதனிடையே, ஆலங்குடியில் 4 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுக்கப்பட்ட சம்பவம், அப்பகுதி மக்களிடையே, கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.