கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக, நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாகப் பிரமதர் மோடி பேசினார். இதில், பிரதமர் மோடியின் உரையில் இடம் பெற்ற முக்கிய அம்சங்கள் குறித்து தற்போது பார்க்கலாம்...

PM Modi complete speech details Corona lockdown

- கடந்த 22 ஆம் தேதி கடைப் பிடிக்கப்பட்ட மக்கள் ஊரடங்கு வெற்றி பெற்றது. இந்த வெற்றியில் ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் பங்குள்ளது. நீங்கள் எல்லோருமே பாராட்டுக்கு உரியவர்களே..

- காட்டுத்தீ போல் வேகமாகப் பரவி வரும் கொரோனா வைரஸ், பல வல்லரசு நாடுகளே செய்வதறியாமல் திகைத்து வருகிறது. நாம் எவ்வளவோ பரவாயில்லை.

- கொரோனா வைரசை கட்டுப்படுத்த ‘தனித்து இருப்பது’ மட்டுமே ஒரே தீர்வு.

- தனித்து இருத்தல் என்பது கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மட்டுமல்ல, ஒவ்வொரு குடிமகனுக்கும் தான். ஏன், இது பிரதமருக்குக் கூட பொருந்தும்.

- தனித்து இருப்பதை நாம் அலட்சியப்படுத்தினால், இந்தியா அதற்குக் கடுமையான விலையைக் கொடுக்க வேண்டியிருக்கும். 

- நாடு முழுவதும் நள்ளிரவு 12 மணி முதல், முழுமையான ஊரடங்கு உத்தரவு அமல் படுத்தப்படும். இது, மக்கள் ஊரடங்கை விட கடுமையானதாக இருக்கும்.

- இந்த ஊரடங்கால் நிதி இழப்பைச் சந்திக்க வேண்டி இருக்கலாம். ஆனால், மக்களின் பாதுகாப்புக்கு இந்த ஊரடங்கு முக்கியம். அதனால் தான், இந்த கடுமையான முடிவு.

- நாடு தழுவிய ஊரடங்கு, 21 நாட்களுக்கு அமலில் இருக்கும்.

PM Modi complete speech details Corona lockdown

- வீட்டை விட்டு ஒரு அடி வெளியே எடுத்து வைத்தால் கூட, கொரோனா வைரஸ் உங்கள் வீட்டுக்குள் நுழைய வழி வகுத்து விடும். இதனால், யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என நாட்டு மக்களைக் கைகூப்பி கேட்டுக் கொள்கிறேன்.

- இந்த 21 நாள் ஊரடங்கைப் பின்பற்றாவிட்டால், நாம் 21 ஆண்டுகள் பின்னுக்குத் தள்ளப்படுவோம். 

- ஒவ்வொருவருக்கும் குடும்பம் மிக முக்கியம். குடும்பத்தை நினைத்துப் பாருங்கள்.

- பொறுமையையும், கட்டுப்பாட்டையும் கடைப்பிடிக்க வேண்டிய நேரம் இது. 

- கட்டுப்பாடாக இல்லாவிட்டால், பேராபத்து நமக்கு நேரிடும்.

- நமது பாதுகாப்புக்காக, தங்களுடைய வாழ்க்கையைப் பணயம் வைத்து பணியாற்றும் மனிதர்களை நினைத்துப் பாருங்கள் என என் கைகூப்பி உங்களை கேட்டுக்கொள்கிறேன்.

- கொரோனா வைரசை கட்டுப்படுத்துவதற்கான மருத்துவ வசதிகளை வலுப்படுத்த மத்திய அரசு 15 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது.

- இந்த சூழ்நிலையில், அனைத்து மாநில அரசுகளும் சுகாதார பணிகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.

- வதந்திகளையும், மூட நம்பிக்கைகளையும் யாரும் நம்ப வேண்டாம்.

- உங்களையும், உங்கள் குடும்பத்தையும் பாதுகாத்துக் கொள்ளுங்கள். 

- அத்தியாவசிய பொருட்கள் தடையின்றி கிடைக்க மத்திய, மாநில அரசுகள் எல்லா நடவடிக்கைகளும் எடுத்து வருகின்றன. 

- இந்த சவாலில் நாம் வெற்றி பெறுவோம் என்பதில் எனக்கு முழு நம்பிக்கையும் இருக்கிறது.
என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.