கொரோனா பாதிப்பால் தமிழகத்தில் முதல்உயிரிழப்பு நிகழ்ந்துள்ளது.

கொரோனா தொற்றின் கோரா தாண்டவத்தால், தமிழகம் சிக்கித் தவித்து வருகிறது. இதனால்,தமிழகத்திலும் வேகமாகப் பரவி வருகிறது. 

One dead in Tamil Nadu due to Corona

தமிழகத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதால், தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளது. 

இதனிடையே, மதுரையைச் சேர்ந்த 54 வயதுடைய ஒருவர், கடந்த சில நாட்களாக மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்தநிலையில், அவரது உடல் நிலை மோசமடைந்தது. இதனால், அவருக்குத் தீவிரமாக சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக நள்ளிரவில் உயிரிழந்தார்.

One dead in Tamil Nadu due to Corona

இதன் காரணமாக, கொரோனாவுக்கு தமிழகத்தில் முதல் உயிரிழப்பு நிகழ்ந்துள்ளது. இந்த சம்பவம் மதுரை மக்களை மட்டுமில்லாமல், ஒட்டுமொத்த தமிழக மக்களையும், கடும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

மேலும், மதுரை உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கொரோனாவிற்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மாவட்ட நிர்வாகம் சார்பில், தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும், பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.