கல்லூரி மாணவியை காதலித்து உல்லாசம் அனுபவித்த ஆசிரியர் ஒருவர், மாணவியுடன் மிகவும் நெருக்கமாக இருந்த வீடியோக்களை வெளியிட்டதால், அவமானம் அடைந்த மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

ஒடிசா மாநிலம் போலாங்கீர் மாவட்டத்தைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர், அங்குள்ள கல்லூரியில் படித்து வந்துள்ளார். அப்போது, அவருக்குப் பாடம் நடத்தும் ஆசிரியர் கணேஷ் செல்மா என்பவர், மாணவியை காதலித்து வந்துள்ளார். 

இதனையடுத்து, தனது காதலை ஆசிரியர் கணேஷ் செல்மா, தன் மாணவியிடம் கூறி உள்ளார். அந்த மாணவியோ, ஆசிரியர் கணேஷ் செல்மா மீது மிகுந்த மரியாதை வைத்திருந்த நிலையில், அவர் மீது கொண்ட அன்பால், ஆசிரியரின் காதலை ஏற்றுக்கொண்டுள்ளார்.

இதனையடுத்து, கணேஷ் செல்மா மாணவி என்று பார்க்காமல், அவரிடம் திருமணம் செய்து கொள்வதாக பல பல ஆசை வார்த்தைகளை அள்ளி வீசி, அந்த மாணவியுடன் உல்லாசம் அனுபவித்து வந்துள்ளார். 

இப்படி தான் நினைக்கும் போதெல்லாம் தன் காதல் மாணவியை, தன்னுடைய ஆசைக்கு இணங்கும் படி, ஆசிரியர் கணேஷ் செல்மா தொடர்ந்து வற்புறுத்தி வந்துள்ளார். அதன்படியே, மாணவியும், காதலனாக இருக்கும் ஆசிரியரின் ஆசைக்கு இணக்கி நடந்துள்ளார். இப்படியாக, அவர்கள் ஒன்றாக இருந்து உல்லாசம் அனுபவித்து வந்ததை, கணேஷ் செல்மா அந்த மாணவிக்கேத் தெரியாமல் வீடியோ மற்றும் புகைப்படங்கள் எடுத்து வைத்துக்கொண்டுள்ளார்.

இப்படிப்பட்ட சூழ்நிலையில், இந்த கொரோனா காலத்தில் காதலர்கள் இருவரும் அவரவர் வீடுகளுக்குச் சென்ற நிலையில், ஆசிரியர் கணேஷ் செல்மா வீட்டில் பார்த்த பெண்ணையே அவர் திருமணம் செய்துகொண்டார். 

இதனையடுத்து, தன் காதல் மாணவி உடன் உல்லாசமாக இருந்த வீடியோ மற்றும் போட்டுக்களை அவர் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ மற்றும் புகைப்படங்கள் சம்மந்தப்பட்ட மாணவிக்கே வந்துள்ளது.

இதனால், கடும் மன உளைச்சலுக்கு ஆளான மாணவி, என்ன செய்வது என்று புரியாமல், காதலனின் துரோகத்தைத் தாங்கிக்கொள்ள முடியாமல், விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டு உள்ளார். 

இது குறித்து விரைந்து வந்த போலீசார், உயிரிழந்த மாணவியின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்து வழக்கப் பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனையடுத்து, வீடியோ வெளியிட்ட  கணேஷ் செல்மா தற்போது தலைமறைவாகி உள்ளதாகவும், அவரை பிடிக்கும் முயற்சியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதனிடையே, காதல் என்ற பெயரில் கல்லூரி மாணவியுடன் உல்லாசம் அனுபவித்த ஆசிரியர் ஒருவர், மாணவியுடன் நெருக்கமாக இருந்த வீடியோவை வெளியிட்ட சம்பவமும், அதனால் மனமுடைந்த மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவமும், அப்பகுதியில் கடும் அதிர்ச்சியையும், பீதியையும் ஏற்படுத்தி உள்ளது.