“வட கொரியா நாட்டில், “காதலும் இல்லை.. நட்பும் இல்லை.. அங்கே சாப்பாடே சிரமம்..” என்று, அந்நாட்டில் இருந்து தப்பி வந்த இளம் பெண் பரபரப்பு குற்றச்சாட்டைக் கூறி உள்ள சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

உலகின் மிகப் பெரிய வல்லரசாகத் திகழும் அமெரிக்காவிற்கே சவால் விடும் நாடாக திகழ்கிறது வட கொரியா. இதனால், உலக நாடுகள் எல்லாம் வட கொரியாவைப் புருவம் உயர்த்தி ஆச்சரியத்தில் அன்னார்ந்து பார்த்து வருகிறது. 

மேலும், அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன், உலக அளவில் மாபெரும் சக்தி மிக்க தலைவராகவே அறியப்பட்டு வருகிறார். அந்நாட்டை, மிகப் பெரும் வல்லரசு நாடாக உருமாற்றிக்கொண்டு வருகிறார் என்ற பேச்சும், உலக நாடுகளில் இடையே பரவலாக உண்டு.

சமீபத்தில், வட கொரியா அதிபர் கிம் ஜாங் உன், ஊடகத்திற்கு தன் முகத்தைக் காண்பிக்காமல் இருந்து வரும் நிலையில், அவர் உயிரிழந்துவிட்டதாக முதலில் கூறப்பட்ட நிலையில், அவர் கோமாவில் இருப்பதாக பிறகு கூடப்பட்டது. ஆனால், அவர் காய்ச்சல் மற்றும் உடல் நலக் குறைவு காரணமாக, தனிமையில் 
இருந்து வருவதாகவும் அடுத்தடுத்து செய்திகள் பரவியது.

இந்நிலையில், “வட கொரியா நாட்டைப் பற்றி வெளி நாடுகளில் பிரமிப்பாகப் பார்த்தாலும், அந்நாட்டில் கூலி வேலை செய்து பிழைக்கும் பெரும்பான்மை மக்கள் சத்தான உணவுகளுக்காகப் பூச்சிகளைச் சாப்பிட்டு வரும் அவலமான ஒரு நிலைதான் இருக்கிறது” என்று, அந்நாட்டில் இருந்து தப்பி வைத்த 26 வயதான Yeonmi Park என்பவர், பரபரப்பு குற்றச்சாட்டைச் சுமத்தி உள்ளார்.

இது தொடர்பாக அவர் சுமத்தி உள்ள பரபரப்பான குற்றச்சாட்டில், “வட கொரியாவில் இருந்து நான், எனது 13 வயதில் வெளியேறினேன். அது வரை நானும், அந்நாட்டு மக்களுடன் சத்தான உணவிற்காகப் பூச்சிகளைத் தான் உணவாக உட்கொண்டு வந்தேன்” என்று அதிர்ச்சி ஊட்டும் தகவலைக் கூறி உள்ளார்.

மேலும், “வட கொரியா தெருக்களில், கேட்பாரற்ற சடலங்கள் பல கிடப்பதை நான் பல முறை என்னுடைய சிறு வயத்தில் பார்த்திருக்கிறேன் என்றும், அங்கு மிகக் கடுமையான சட்ட திட்டங்கள் பின்பற்றப்பட்டு வருகின்றன” என்றும், தெரிவித்துள்ளார்.

முக்கியமாக “வட கொரியா நாட்டைப் பொறுத்தவரைப் பள்ளி மற்றும் கல்லூரிகளில் நட்பு - காதல் என்பதையே கடுகு அளவுக பார்க்க முடியாதும் என்றும், அந்நாட்டில் மின்சாரம் கூட பொது அல்ல” என்றும், பகிரங்கமான குற்றச்சாட்டைச் சுமத்தி உள்ளார்.

குறிப்பாக, “வட கொரியா அதிபர் கிம் ஜாங் உன் பில்லியன் கணக்கான டாலர்கள் செலவில் அணு ஆயுதம் தயாரிப்பதற்கு முனைப்புக் காட்டுவதையும், ஆனால் உணவு தொடர்பாக எதையும் அவர்கள் செய்யவில்லை” என்றும், குற்றம்சாட்டினார்.

மேலும், “என் தாயாருடன் கடந்த 2007 ஆம் ஆண்டு வட கொரியாவில் இருந்து சீன நாட்டைச் சேர்ந்த ஒருவரின் உதவி உடன் அந்நாட்டில் இருந்து  வெளியேறியதாகவும், ஆனால் வட கொரியா நாட்டை விட்டு வெளியே அழைத்து வந்த அந்த சீன நபர், என்னையும் தனது தாயாரையும் இன்னொருவருக்கு விற்று விட்டதாகவும், அந்த நபர் தனது தாயை பாலியல் தொழிலுக்குள் உட்படுத்திக் கொடுமைப்படுத்தினார்” என்றும், அந்த பெண் பகிரங்கமாகக் குற்றம்சாட்டி உள்ளார்.

அதன் தொடர்ச்சியாகவே, எப்படியோ அந்த கும்பலின் பிடியிலிருந்து அங்கிருந்து தப்பி மங்கோலியா சென்று கோபி பாலைவனம் வழியாக, தென் கொரியாவில் உள்ள எனது சகோதரியுடன் தற்போது சேர்ந்து வாழ்ந்து வருவதாக” Yeonmi Park என்ற இளம் கூறியுள்ளார். Yeonmi Park ன் இந்த பேட்டி, தற்போது உலக நாடுகளை அதிரவைத்துள்ளதுடன், இணையத்தில் பெரும் வைரலாகி வருகிறது.