திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி இளம் பெண்ணை ஏமாற்றியவர் கைது செய்யப்பட்டார்.

நெல்லை மாவட்டம் கூடங்குளம் அருகேயுள்ள ஊரல்வாய் மொழியைச் சேர்ந்த கோபால் என்ற எம்.பி.ஏ. பட்டதாரி இளைஞர், அமெரிக்காவில் பணியாற்றி வந்தார். 

Nellai Man arrested cheating women over   marriage

இதனிடையே, விடுமுறையில் ஊருக்கு வந்த கோபால், எதிர் வீட்டில் வசிக்கும் பட்டதாரி இளம் பெண் ஒருவவரை காதலித்து வந்துள்ளார். அந்த பெண்ணை திருமணம் செய்வதாகக் கூறி, அந்த பெண்ணுடன் கோபால் நெருங்கிப் பழகி வந்ததாகக் கூறப்படுகிறது. 

இந்நிலையில், அந்த பெண்ணை திருமணம் செய்ய கோபால் மறுத்துள்ளார். இது குறித்து அந்த பெண் விளக்கம் கேட்டதற்கு, எந்த பதிலும் சொல்லாமல் கோபால் விலகிச் சென்றுள்ளார்.

இதனால், அதிர்ச்சியடைந்த இளம் பெண், அங்குள்ள வள்ளியூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இது குறித்து, வழக்குப்பதிவு செய்த போலீசார், கோபாலை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பாளையங்கோட்டை மத்தியச் சிறையில் அடைத்தனர்.

Nellai Man arrested cheating women over   marriage

இதனிடையே, நெல்லை அருகே திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி, இளம்பெண்ணை மோசம் செய்து ஏமாற்றிய இளைஞர் கைது செய்யப்பட்ட சம்பவம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.