வீட்டில் காதலனுடன் இருந்தபோது, தாய் வந்ததால் மாடியிலிருந்து குதித்த சிறுமியின் கால் முறிந்தது.

மும்பை குர்லா பாயில் பஜார் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் முதல் தளத்தில், தனது குடும்பத்தினருடன் 17 வயது இளம் பெண் வசித்து வருகிறார். 

Mumbai school girl jumps from rooftop

இந்நிலையில், நேற்று விடுமுறை தினம் என்பதால், சிறுமியின் வீட்டில் உள்ள அனைவரும் வெளியில் சென்றிருந்தனர்.

இதனால், வீட்டில் யாரும் இல்லை என்பதால், தனது 20 வயதான காதலன் சுனிலுக்கு போன் செய்து, தனது வீட்டிற்கு வரவழைத்து உள்ளார்.

காதலி அழைப்பின் பேரில், சுனிலும் அங்கு வந்துள்ளார். இருவரும் வீட்டின் படுக்கை அறையில் வெகு நேரம் ஒன்றாக இருந்ததாகக் கூறப்படுகிறது.

அப்போது, சிறுமியின் தாயார், திடீரென வீட்டுக்கு வந்து கதவைத் தட்டியுள்ளார். இதனால், பதறிப்போன காதலர்கள் இருவரும், என்ன செய்வது என்று தெரியாமல், மாடியிலிருந்து கீழே குதித்துத் தப்பிச் செல்ல முயன்றனர்.

அப்போது, இருவரும் மாடியிலிருந்து கீழே குதித்துள்ளனர். இதில், காதலன் கீழே குதித்துத் தப்பிச் சென்ற நிலையில், காதலிக்கு குதித்த வேகத்தில் கால் முறிந்துள்ளது. இதில், அவர் வலியால் கத்தி கூச்சலிடவே, மாடியிலிருந்து இறங்கி வந்த, இளம் பெண்ணின் தாயார், “ஏன் கீழே குதித்தாய்?” என்று கேட்டுள்ளனர்.

அதற்கு, அந்த இளம் பெண், “காதலனை வரவழைத்து, காலை முதல் படுக்கை அறையில் ஒன்றாக இருந்ததாக” கூறி உள்ளார். 

இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த இளம் பெண்ணின் தாய், அங்குள்ள வி.பி.நகர் காவல் நிலையத்தில் சுனில் மீது புகார் அளித்துள்ளார். இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், போக்சோ சட்டத்தின் கீழ் சுனிலை கைது செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.