கள்ளக்காதலை கை விடுமாறு தாய்க்கு அறிவுரை சொன்ன மகளை தாய் அடித்ததால், மனைவியை கணவனே அடித்து கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

வேலூர் மாவட்டம் கம்மவான்பேட்டையை சேர்ந்த ஓய்வுபெற்ற ராணுவ வீரரான 42 வயதான செல்வம், தற்போது தனியார் நிறுவனத்தில் செக்யூரிட்டியாக வேலை செய்து வருகிறார்.

Mother warned by daughter to stop love affair

இவரது மனைவி 36 வயதான சித்ராவுடன், கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்ற  நிலையில், இந்த தம்பதிக்கு ஒரு மகள் மற்றும் மகன் உள்ளனர்.

இதனிடையே, சித்ரா அதே பகுதியைச் சேர்ந்த ஒரு இளைஞர் உடன் தவறான பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்ததாகக் கூறப்படுகிறது.

ஒரு கட்டத்தில், இந்த விவகாரம் கணவருக்குத் தெரியவந்துள்ள நிலையில், அவர் மனைவியை அழைத்துக் கண்டித்துள்ளார். இதனால், குடும்பத்தில் அடிக்கடி சண்டை வந்துள்ளது. 

இதன் காரணமாக வீட்டில் நிம்மதியில்லாமல் இருந்த சித்ராவின் மகள், தன் தாயிடம் “கள்ளக்காதலை கைவிடுமாறு” அறிவுரை கூறியுள்ளார். இதனால், இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில், ஆத்திரமடைந்த தாய் சித்ரா, தன் மகளை கடுமையாகத் தாக்கி உள்ளார். இந்த தகவல் வேலைக்குச் சென்றிருந்த தந்தை செல்வத்திற்கு தெரியவந்தது.

Mother warned by daughter to stop love affair

இதனால், கடும் கோபடைந்த செல்வம், வீட்டிற்கு வந்து மனைவியை கடுமையாகத் தாக்கி உள்ளார். இதில், படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் சரிந்த சித்ரா, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து விரைந்து வந்த போலீசார், சித்ராவின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், செல்வத்தையும் போலீசார் கைது செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனிடையே, கள்ளக்காதலை கை விடுமாறு தாய்க்கு - மகள் அறிவுரை சொன்ன விவகாரத்தில், மகளை தாய் அடித்ததால், கணவனே மனைவியை அடித்து கொலை செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.