அக்கா மகளை, மனைவியுடன் சேர்த்து பாலியல் தொழிலில் தாய்மாமன் ஈடுபடுத்திய சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த 15 வயது சிறுமி, பள்ளி விடுமுறையில், குஜராத்தில் உள்ள தன் தாய்மாமன் வீட்டிற்குச் சென்றுள்ளார். 

Man pushes sister daughter into prostitution

அங்கு, தொடக்கத்தில் அந்த இளம் பெண் கேட்டதையெல்லாம் வாங்கித் தந்த தாய்மாமன், அடுத்த சில நாட்களில் அகமதாபாத் சோலார் என்ற பகுதிக்கு அந்த பெண்ணை அழைத்துச் சென்றுள்ளார். அங்கு, அவருடைய மனைவியுடன் (அத்தையுடன்) சேர்ந்து பாலியல் தொழிலில் தள்ளிவிட்டுள்ளார்.

அங்கு, பல்வேறு சித்ரவதைகளைத் தந்து, அடித்துத் துன்புறுத்தி, கட்டாயப்படுத்தி அந்த இளம் பெண்ணை,  பாலியல் தொழிலைச் செய்ய வைத்துள்ளனர்.

Man pushes sister daughter into prostitution

அத்துடன், அங்குள்ள பாடி மஜாஜ் சென்டரிலும், வேலை பார்க்க வைத்து, அங்கேயும் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி உள்ளனர். இதனையடுத்து, அங்கு வந்த ஒரு இளைஞரிடம் செல்போனை வாங்கி, அகமதாபாத்தில் உள்ள தன் அண்ணனுக்கு போன் செய்து, தனக்கு நேர்ந்த அவலங்களைக் கூறி கதறி அழுதுள்ளார். மேலும், தன்னை வந்து காப்பாற்றும்படி கூறி கெஞ்சி உள்ளார்.

Man pushes sister daughter into prostitution

அப்போது, அவர் சொன்ன அறிவுரையின்படி, அந்த பெண், அங்கிருந்து தப்பித்து, வெளியே வந்துள்ளார். இதனையடுத்து, பாதிக்கப்பட்ட இளம் பெண்ணும், அந்த பெண்ணின் அண்ணனும் சேர்ந்து, அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அத்துடன், தலைமறைவான தாய்மாமனைத் தேடி வருகின்றனர்.