கள்ளக் காதலை விட மறுத்த மனைவியைக் கணவன் அடித்துக் கொன்றுள்ளார். 

மதுரை அலங்காநல்லூர் அடுத்த கம்மாளபட்டியைச் சேர்ந்த வெள்ளைப் பிரியன், தனது மனைவி அபிநயாவுடன் வசித்து வந்தார். திருமணம் ஆன சில நாட்களிலேயே இருவருக்கும் இடையே அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. 

husband kills wife

இந்நிலையில், அபிநயாவுக்கு அதே பகுதியைச் சேர்ந்த ராம்குமாருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இது நாளடைவில், கள்ளக் காதலாக மாறியுள்ளது. இது தொடர்பாக அபிநயாவை, அவரது கணவர் வெள்ளைப் பிரியன், பல முறை கண்டித்துள்ளார். இது தொடர்பாக இருவருக்கும் இடையே பலமுறை சண்டையும் வந்துள்ளது. 

சம்பத்தன்று நேற்று மாலை பிற்பகல் மனைவி அபிநயாவுடன் வெளியே சென்றுவிட்டு, இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக்கொண்டிருக்கும்போது, கள்ளக் காதலைக் கைவிடுமாறு, கணவர் வற்புறுத்தி உள்ளார். ஆனால், “ராம்குமாரைப் பிடித்திருப்பதாகவும், அவருடன் அப்படித்தான் இருப்பேன்” என்றும் அபிநயா கூறியதாகத் தெரிகிறது.

இதனால், ஆத்திரமடைந்த கணவன், அபிநயாவை அடித்து அருகில் உள்ள பள்ளத்தில் தள்ளி கொலை செய்துள்ளார். இதில், படுகாயம் அடைந்த அவர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 

husband kills wife

இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார்,  வெள்ளைப் பிரியனை கைது செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே, கள்ளக் காதலைக் கைவிட மறுத்த மனைவியை, கணவனே அடித்து கொலை செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.