நாடு முழுவதும் நள்ளிரவு முதல் தொடங்கிய 21 நாள் ஊரடங்கு உத்தரவின் போது, நாம் அனைவரும் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள் என்னென்ன? என்பதை தற்போது பார்க்கலாம்..

India under lockdown for 21 days complete details

கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள்

- மார்ச் 1 ஆம் தேதிக்குப் பிறகு, வெளிநாடுகளிலிருந்து வந்தவர்கள், தொடர்ந்து வீட்டுக் கண்காணிப்பில் இருக்கவேண்டும். 
- வீட்டு கண்காணிப்பில் இருப்பவர்களைத் தினந்தோறும் 5 துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் கண்காணிப்பார்கள்.
- பொதுமக்கள் அத்தியாவசியத் தேவைகளுக்கு மட்டுமே வெளியே வர வேண்டும்.
- வீட்டை விட்டு வெளியே வரும்போது, மற்றவர்களிடம் இருந்து 3 அடி விலகியே ஒவ்வொருவரும் இருக்க வேண்டும், செயல்பட வேண்டும்.
- பொது இடங்களில் 5 பேருக்கு மேல் கூடுவதற்குத் தடை. அனைவரும் இதைத் தொடர்ந்து பின்பற்ற வேண்டும்.
- மார்ச் 16 அல்லது அதற்கு முன்பு பதிவு செய்த திருமணங்களை மட்டுமே நடத்த அனுமதி.
- அனுமதி அளிக்கப்பட்ட திருமணத்தில், 30 பேருக்கு மேல் கூடக் கூடாது.
- கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த ஆசிரியர்கள், ஊழியர்கள் வீட்டிலிருந்து பணியாற்றலாம். 
- உணவகங்களில் பார்சல் உணவுகள் மட்டுமே வழங்க அனுமதி. 

India under lockdown for 21 days complete details

என்னென்ன இயங்கும் தெரியுமா?

- அரசுத் துறையின் தலைமை அலுவலகங்கள் போதிய பணியாளர்களுடன் செயல்படும்.
- மாவட்ட நிர்வாகம், மின்சார வாரியங்கள், மெட்ரோ குடிநீர், குடிநீர் விநியோகத் துறைகள் இயங்கும்.
- மருத்துவம் சார்ந்த அனைத்து கல்வி நிறுவனங்களும் வழக்கம் போல் செயல்படும். 
- அத்தியாவசிய பொருட்கள் தொடர்பான விற்பனைகளுக்கு அனுமதி உண்டு. 
- வங்கிகள் மற்றும் ஏ.டி.எம்.கள் செயல்படும்.
- ரேஷன் கடைகள் செயல்படும். 
- ஆவின் செயல்படும். 
- அம்மா உணவகங்கள் செயல்படும்.
- மருத்துவமனைகள், மருந்தகங்கள் செயல்படும்.
- பெட்ரோல் நிலையங்கள் செயல்படும்.
- பத்திரிகை, தொலைக்காட்சி ஊடகங்கள் செயல்படும்.
- லாரிகள், டெம்போக்கள், சரக்கு லாரிகள் உள்ளிட்ட அனைத்து சரக்கு வாகனங்கள் இயங்கும்.
- மருத்துவமனைகளிலிருந்து வீடுகளுக்கு வாடகை கார்கள் இயங்கும். 

India under lockdown for 21 days complete details

என்னென்ன இயங்காது?

- மத வழிபாட்டுத் தலங்களில் பொதுமக்களின் வழிபாட்டுக்கு அனுமதி கிடையாது.
- உணவகங்கள் மற்றும் பொது இடங்களில் மக்கள் கூடுவதற்கு அனுமதி கிடையாது. 
- அரசு மற்றும் தனியார் பேருந்துகள், மெட்ரோ சேவை, டாக்ஸி, ஷேர் ஆட்டோ, ஆட்டோ என மக்களுடன் தொடர்புடைய அனைத்தும் இயங்காது.
- ஸ்விக்கி, ஷொமாட்டோ ஆகிய உணவுப் பொருட்களை விநியோகிக்கும் நிறுவனங்களுக்கு அனுமதி கிடையாது. 
- ரயில், விமான நிலையங்கள் திறந்திருந்தாலும் சேவைகள் கண்டிப்பாக இருக்காது.
- டாஸ்மாக் மதுபானக் கடைகள் முழுவதுமாக மூடப்படுகிறது. 

இந்த விதிமுறைகளை ஒவ்வொருவரும் கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும் என்று மத்திய - மாநில அரசுகள் உத்தரவிட்டுள்ளன.