புதிய வருமான வரி.. “இருக்கு ஆனா இல்ல” என்ற பாணியில் இருப்பதாக நடுத்தர வர்க்கத்தினர் குற்றம்சாட்டி உள்ளனர். 

2020-21 ஆம் ஆண்டிற்கான புதிய பட்ஜெட்டை, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த சில நாட்களுக்கு முன்பு, நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். 

அதில், வருமான வரி செலுத்துவோருக்குச் சலுகைகள் தந்திருப்பதாக அறிவித்தார்.

Income tax deduction under section 80CCD

அதன்படி,  

- 5 லட்சம் ரூபாய் வரை வருமானம் உள்ளவர்களுக்கு வரி இல்லை.
- ரூ.5 லட்சம் முதல் ரூ.7.5 லட்சம் வரை வருமானம் இருந்தால், வருமான வரி 20%ல் இருந்து 10%ஆக குறைப்பு. இதனால், 5 லட்சம் முதல் 7.5 லட்சம் ரூபாய் வரை வருமானம் உள்ளவர்கள் 10 சதவீதம் வருமான வரி மட்டுமே செலுத்த வேண்டும்.

- 7.5 லட்சம் முதல் 10 லட்சம் ரூபாய் வரை வருமானம் உள்ளவர்களுக்கு 15 சதவீதம் வருமான வரி செலுத்த வேண்டும்.
- 10 லட்சம் ரூபாய் முதல் 12.5 லட்சம் ரூபாய் வரை வருமானம் உள்ளவர்களுக்கு 20 சதவீதம் வருமான வரி உண்டு.
- 12.5 லட்சம் முதல் 15 லட்சம் ரூபாய் வரை வருமானம் உள்ளவர்களுக்கு 25 சதவீதம் வருமான வரி என்று புதிய அறிவிப்பை வெளியிட்டார்.

இதனால், நடுத்தர மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால், முதலில் வரி சலுகை தருவது போல் தந்து விட்டு, பின்னாடியே அதற்கும் செக் வைத்துள்ளார். இதனால், தனி நபர் வருமான வரி விகிதம் பொது மக்களிடையே, குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதாவது, புதிய வருமான வரியைப் பெற விரும்புவோர், ஏற்கனவே பெறக்கூடிய முதலீட்டு வரிக் கழிவு சலுகைகளைப் பெற முடியாது. 

குறிப்பாக வீட்டு வாடகை, லோன் தொகை, இன்சூரன்ஸ், குழந்தைகளின் பள்ளி கட்டணம் உட்பட 70 க்கும் மேற்பட்ட வரிக்கழிவு சலுகைகளைத் தேர்வு செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

Income tax deduction under section 80CCD

ஆனால், பழைய படி 20 சதவீதம் வரி செலுத்துவோர் மட்டுமே, முதலீட்டு வரிக் கழிவு சலுகைகளைப் பெற முடியும். அதன்படி, லோன் தொகை, இன்சூரன்ஸ், குழந்தைகளின் பள்ளி கட்டணம் உட்பட 70 க்கும் மேற்பட்ட வரிக்கழிவு சலுகைகளைப் பெற முடியும். இதன் மூலமாக, நாம் கட்டக்கூடிய வருமான வரியில் பெரும்பாலான தொகை குறையும்.

ஆனால், புதிய வரி சலுகைகள் 70 க்கும் மேற்பட்ட வரிக்கழிவு சலுகைகளைப் பறிக்கப்படுவதால், 
பொதுமக்கள் கடும் குழப்பம் அடைந்துள்ளதோடு, அதிருப்தியும் அடைந்துள்ளனர்.

புதிய வருமான வரி.. “இருக்கு ஆனா இல்ல” என்ற பாணியில், பலரும் இணையத்தில் மீம்ஸ் வெளியிட்டு, புதிய பட்ஜெட்டை விமர்சனம் செய்து வருகிறார்கள்.