இன்று முதல் உணவகங்களில் அமர்ந்து உணவு சாப்பிட அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், உணவருந்த வருபவர்கள் பின்பற்றவேண்டிய விதிமுறைகளையும் தமிழக அரச வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு உத்தரவு தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வரும் நிலையில், தளர்வுகளும் ஒன்றன்பின் ஒன்றாக அரசு சார்பில் வழங்கப்பட்டு வருகிறது.

Guidelines for people eating in restaurants from today

இந்நிலையில், உணவகங்களில் இன்று முதல் அமர்ந்து சாப்பிட தமிழக அரசு அனுமதி வழங்கி உள்ளது. மேலும், உணவருந்த வருபவர்கள் பின்பற்றவேண்டிய விதிமுறைகளையும் தமிழக அரச வெளியிட்டுள்ளது.

அதன்படி, 

Guidelines for people eating in restaurants from today

- உணவகங்களில் கண்டிப்பாக தெர்மல் ஸ்கெனிங் கருவிகள் இருக்க வேண்டு வேண்டும்.

- கொரோனா அறிகுறி உள்ள நபர்கள், எக்காரணம் கொண்டும் கடைக்குள் உள்ளே அனுப்ப அனுமதி கிடையாது.

- கிருமி நாசினி கொண்டு கைகளைச் சுத்தம் செய்த பின்னரே, வாடிக்கையாளர்கள் கடைக்கு உள்ளே அனுமதிக்கப்பட வேண்டும்.

- கொரோனா பரவும் வாய்ப்பு உள்ளதால், அனைத்துவிதமான உணவகங்களிலும் ஏசி பயன்படுத்தக் கூடாது. 

- உணவகங்களில் வைக்கப்பட்டுள்ள உணவு மேஜைகளுக்கு இடையே கண்டிப்பாக 6 மீட்டர் இடைவெளி இருப்பது அவசியம்.

- உணவகங்களில் 50 சதவீத இருக்கைகள் மட்டுமே நிரப்பப்பட வேண்டும்.

- ஊழியர்கள் எல்லோரும் கட்டாயமாக மாஸ்க் அணிய வேண்டும். 

- ஊழியர்கள் தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும்.

- கொரோனா தொற்று பரவும் வாய்ப்புள்ளதால் செயின், கைக்கடிகாரம் உள்ளிட்ட ஆபரணங்களை ஊழியர்கள் அணியத் தடை

- உணவுகளைச் சமைக்கும் போது முறையான தரக்கட்டுப்பாட்டைப் பின்பற்ற வேண்டும்.

- கூடுதல் கட்டணம் எதுவும் வசூலிக்கப்படக் கூடாது

- கை கழுவும் இடத்தில் கண்டிப்பாகக் கிருமி நாசினி வைத்திருக்க வேண்டும்.

- உணவகங்களில் உள்ள உணவகத்திலுள்ள கழிவறைகளை நாள் ஒன்றுக்கு 5 முறை சுத்தம் செய்ய வேண்டும்.

உள்ளிட்ட பல்வேறு விதிமுறைகளைத் தமிழக அரசு விதித்துள்ளது.