லவ் டார்ச்சரால், பேராசியர் ஒருவர் கல்லூரி வாசலிலேயே தீ வைத்து எரிக்கப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

காதல், அவ்வளவு தெய்வீகமான ஒன்று! ஆனால், அப்படிப்பட்ட காதலின் உன்னதத்தை இங்கு யாரும் புரிந்துகொள்வதில்லை. ஆனால், காதல் என்ற பெயரில், இங்கு கட்டவிழ்த்து விடப்படும் குற்றங்கள் மட்டும் அவ்வளவு எளிதாக எண்ணிக்கையில் அடக்கிவிட முடியாது.

Female professor burnt alive in Maharashtra

மகாராஷ்டிரா மாநிலம் வார்தா பகுதியில் செயல்பட்டு வரும் ஒரு தனியார் கல்லூரியில், 25 வயது இளம் பெண் ஒருவர் பேராசிரியையாக வேலை பார்த்து வருகிறார். 

இவரை, அங்குள்ள தரோடா கிராமத்தைச் சேர்ந்த விக்கி நாக்ரலே என்பவர், கடந்த 2 ஆண்டுகளாக பின் தொடர்ந்து வந்து, லவ் டார்ச்சர் கொடுத்துள்ளார். 

விக்கி நாக்ரலேவுக்கு திருமணம் ஆகி 7 மாதத்தில் குழந்தை இருப்பதாகக் கூறப்படுகிறது. ஆனாலும், அந்த கல்லூரி பேராசிரியரின் பின்னாடியே சுற்றி, அவருக்கு லவ் டார்ச்சர் கொடுத்துள்ளார்.

ஒரு கட்டத்தில் லவ் டார்ச்சர் அதிகமானால், அதைப் பொறுத்துக்கொள்ள முடியாமல், “எனக்குக் கல்யாணமாகி குழந்தை இருக்கிறது.. என்னை விட்டுடு ப்ளீஸ்” என்று அவனிடம் கெஞ்சி உள்ளார்.

Female professor burnt alive in Maharashtra

இதனால், அதிர்ச்சியடைந்த அவன், அந்த இளம் பெண்ணை ஃபாலோ பண்ணி சென்றுள்ளார். அப்போது, அந்த பெண் பேருந்திலிருந்து இறங்கி, கல்லூரிக்கு நடந்து வரும் வழியில், கல்லூரி வாசலில் வந்து வழி மறித்து நின்ற விக்கி, அந்த பெண்ணின் மீது பெட்ரோலை ஊற்றி, கண் இமைக்கும் நேரத்தில் தீ வைத்து எரித்துள்ளார்.

இதில், அந்த பெண்ணின் மீது தீ பற்றி எரிந்த நிலையில், விக்கி அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். இதனையடுத்து, அந்த வழியாக பேருந்தில் சென்றவர்கள், இறங்கி வந்து.. அருகிலிருந்த தண்ணீரை எடுத்து, அந்த பெண்ணின் மீது ஊற்றி, அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமித்தனர்.

அங்கு, அந்த பெண்ணுக்குத் தீவிரமாகச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அத்துடன், அந்த பெண்ணுக்கு 40 சதவீதம் தீ காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. 

இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், லவ் டார்ச்சரால், பேராசிரியர் மீது தீ வைத்த விக்கியை கைது செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Female professor burnt alive in Maharashtra

இதனிடையே, மகாராஷ்டிரா மாநிலத்தில் லவ் டார்ச்சரால் கல்லூரி பேராசியர் ஒருவர், கல்லூரி வாசலிலேயே தீ வைத்து எரிக்கப்பட்ட சம்பவம், அப்பகுதியில் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.