திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றும், ஆகவே பெண்கள் தங்களைத் தாங்களே பாதுகாத்துக் கொள்ள வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது என்றும் சொல்லி கல்லூரி மாணவிகளுக்கு பெப்பர் ஸ்பிரே வழங்கியுள்ளார் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி. 

தமிழகத்தில் பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. சட்டம்-ஒழுங்கு சரியாக இல்லை என்று திமுக ஆட்சிக்கு வந்தது முதலாக குற்றம்சாட்டி வருகிறார் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி.   தற்போது தமிழகத்தில் பாலியல் வன்கொடுமைகள் குறிப்பாக கூட்டு பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்து வரும் நிலையில்,  எடப்பாடி பழனிச்சாமி ஒரு அதிரடி நடவடிக்கையினை எடுத்துள்ளார்.

இந்நிலையில் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள், அதிமுக சார்பில் பல்வேறு கல்லூரிகளின் மாணவிகளையும், பணிபுரியும் பெண்களையும் அழைத்து ஆபத்து காலத்தில் கயவர்களிடம் இருந்து பாதுகாத்துக்கொள்ள பெப்பர் ஸ்பிரே வழங்கினார். மாணவிகள் தங்களுக்கு எங்கேயும் பாதுகாப்பு இல்லை என்ற குற்றச்சாட்டை முன்வைத்த போது, திமுக ஆட்சிக்கு வந்த 10 மாதங்களில் பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன என எதிர் கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.   

அதனைத்தொடர்ந்து தெரிவித்த அவர் கூட்டு பாலியல் வன்கொடுமை அதிகரித்திருக்கிறது. பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத மாநிலமாக தமிழகம் மாறி  வருகிறது. அதனால் பெண்கள் தங்களைத் தாங்களே பாதுகாத்துக் கொள்ள வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது. அதற்குத்தான் பெப்பர் ஸ்பிரே வழங்கப்பட்டிருக்கிறது. ஆபத்து காலத்தில் இதை பயன்படுத்திக் கொள்ளுங்கள். அதிமுகவும் முடிந்த அளவுக்கு பெண்களுக்கு பாதுகாப்பு கொடுக்கும் என்று கூறி நம்பிக்கை கொடுத்திருக்கிறார் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும் எதிர் கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி.