உலகிலேயே அதிக வயதான தம்பதி! 79 ஆண்டுகால வாழ்க்கை!! இவர்களிடம் இளம் தம்பதிகள் கற்றுக்கொள்ள வேண்டியது என்ன? - SPL Article

உலகிலேயே அதிக வயதான தம்பதி! 79 ஆண்டுகால வாழ்க்கை!! இவர்களிடம் இளம் தம்பதிகள் கற்றுக்கொள்ள வேண்டியது என்ன? - SPL Article - Daily news

உலகிலேயே அதிக வயதான தம்பதிகள் என்று, 79 ஆண்டுகால வாழ்க்கை வாழ்ந்து வரும் ஈக்வடார் நாட்டைச் சேர்ந்த கணவன் - மனைவி தேர்வு செய்யப்பட்டுள்ளது நிகழ்வு, உண்மையான காதலை ஒருமுறை திரும்பிப் பார்க்கச் செய்கிறது.

காதல், இந்த உலகத்தில் அவ்வளவு சக்தி மிக்க ஒரு வார்த்தை! 

“காதல், அது ஒரு கெட்ட வார்த்தை” என்று பலர் சொன்னாலும், அது கெட்டுப்போகாத வார்த்தை என்றே தான் சொல்ல வேண்டும். காதலில், அந்த அளவிற்கு ஆழமான அன்பைப் பார்க்க முடியும். 

“ஆனால், அப்படியான காலமெல்லாம் மலையேறிப் போய்விட்டது” என்று சொல்பவர்களுக்கு, உலகிலேயே அதிக வயதான தம்பதிகள் என்று, 79 ஆண்டுகால வாழ்க்கை வாழ்ந்து வரும் ஈக்வடார் நாட்டைச் சேர்ந்த கணவன் - மனைவி தேர்வு செய்யப்பட்டுள்ளது, உண்மையான காதல் இன்னும் இந்த உலகத்தில் உயிர்ப்போடு தான் வாழ்ந்துகொண்டு இருக்கிறது என்பதற்கு சாட்சிக்கூறி, காதலின் பசுமையான நினைவுகளை ஒருமுறை திரும்பிப் பார்க்க வைக்கிறது.

குடும்ப வாழ்க்கையின் அடிப்படையே பரிசுத்தமான அன்பும் நம்பிக்கையும் தான். ஆனால் இன்றைய கால சூழலிலோ வளர்ந்து, வளைந்தோடிக்கொண்டிருக்கும் அதி நவீன உலகில் அன்பு அறுபட்டு, நம்பிக்கை நலிவடைந்துபோய் உள்ளது.

குடும்பத்துடனான நல்லிணக்க வாழ்வே, ஆரோக்கியமான வாழ்வுக்கும் நீடித்த வாழ்வுக்கும் நம்மை அழைத்துச் செல்லும் என்ற புரிதல், பெரும்பாலான குடும்பங்களில் இன்று புதையுண்டு போய்விட்டது. அதனால், சமூக வெளிகளில் குடும்பங்கள் சிதைந்து, தனி ஒருவனாகவும், தனி ஒருத்தியாகவும் தனிமரமாகத் தனித்து விடப்பட்டவர்களாக நிற்கிறார்கள். தனித்து நின்றாலும், தனித்துவம் இழந்து நோக்கமே இல்லாமல் செல்லும் இந்தப் பயணம் எதை நோக்கி, இன்னும் எவ்வளவு தூரம், யாருக்காக என்ற கேள்விகளுக்கு, எவர்களிடமும் விடை இல்லை. 

கடந்த காலங்களில் இதுவரை இல்லாத அளவுக்கு விவாகரத்து வழக்குகள் நீதிமன்றப் படியேறி நிற்கின்றன. தற்போது இந்த ஆண்டு, வழக்கத்தைவிட விவாகரத்து வழக்குகள் அதிக எண்ணிக்கையில் குவிந்து நீதிமன்றத்தையே திணறடித்து வருகின்றன.

இப்படியான ஒரு ஃபாஸ்ட் புட் வாழ்க்கைச் சூழலுக்கு மத்தியில் தான், ஈக்வடார் நாட்டைச் சேர்ந்த 110 வயதாகும் கணவன் ஜூலியோ சீசர் மோராவும், 104 வயதுடைய மனைவி Waldramina மக்லோவியாவும் கிட்டத்தட்ட 79 ஆண்டுகள் ஒன்றாகச் சேர்ந்து வாழ்ந்துகொண்டு இருக்கிறார்கள். 

“இவர்களுக்குள் சண்டையே வர வில்லையா? பிரச்சனையே எழ வில்லையா?” என்ற கேள்விகள் எழாமல் இல்லை. மற்ற குடும்பத்தில் இருந்ததைப் போலவே, இவர்களுக்குள்ளும் பிரச்சனைகள் எழுந்திருக்கிறது. ஆனால், அவை அனைத்து பிரச்சனைகளையும், ஒருவர் மேல் ஒருவர் வைத்திருந்த அன்பு, அந்த பிரச்சனைகள் எல்லாவற்றையும் சுக்கு நூறாக உடைத்து எரிந்துவிட்டது. 

கணவன் - மனைவி, ஒருவர் மேல் ஒருவர் வைத்திருந்தது வெறும் அன்பு மட்டுமல்ல. மிகப் பெரிய நம்பிக்கை. அது வெறும் நம்பிக்கையோடு முடிந்துவிட வில்லை. ஒருவர் மேல் ஒருவர் கொண்டிருந்த மரியாதை, ஒருவர் மேல் ஒருவர் கொடுத்த சுதந்திரம், பரிசம், பரவசம், உற்சாகம், உத்வேகம், உபசரிப்பு, உண்மை, நேர்மை.. இப்படியாக ஒவ்வொன்றாகச் சொல்லிக்கொண்டே போகலாம். ஆனால், எத்தனை விதமான விசயங்களை நாம் அடிகிக்கொண்டே போனாலும், 
இது எல்லாவற்றுக்கும் அவர்கள் ஒருவருக்கொருவர் வைத்திருந்த அன்பே தலைமை வகிக்கச் செய்தது தான், முதன் முதல் காரணம். 

இப்படி, எல்லா வித ஈர்ப்பும் கொண்ட இந்த தம்பதிக்கு 11 பேரன்களும், 21 கொள்ளு பேரன்களும் உள்ளனர். இந்த தம்பதிகள் தான், உலகிலேயே மிக வயதான தம்பதி என்று அங்கீகரிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. தற்போது, இந்த தம்பதிக்கு உலகம் முழுவதும் வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன..

உலகிலேயே மிக வயதான இந்த தம்பதிகளிடம் இன்றை இளம் தம்பதிகள் கற்றுக்கொள்ள வேண்டிய 3 விசயம் உண்டு. அன்பு, பொறுமை, விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை. இந்த 3 மந்திரங்களையும், இந்த தம்பதிகள் வேத மந்திரங்களாகக் கற்றுக்கொண்டு கடைப்பிடித்ததால் தான், அவர்களது வாழ்க்கை வையகம் முழுவதும் புகழ் பாடுகிறது. 

 

Leave a Comment