இந்தியா வரும் அமெரிக்க அதிபர் டொனால்டு  டிரம்ப்பின் சுற்றுப்பயணம் விவரங்கள் வெளியாகி உள்ளன.

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், அரசு முறை பயணமாக இன்று இந்தியா வருகிறார். அவருடன், அவருடைய மனைவி மெலனியா டிரம்பின் மகள் உள்ளிட்டோர் உடன் வருகின்றனர்.

இந்நிலையில், டிரம்ப்பின் சுற்றுப்பயணம் விவரங்களை மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் தற்போது வெளியிட்டுள்ளது.

Donald Trump Indian tour itinerary

அதன்படி, 

இன்று காலை 11.40 மணிக்கு ஆமதாபாத் விமான நிலையத்தில் டிரம்ப் வந்து இறங்குகிறார்.

இன்று முதல் நிகழ்வாக மதியம் 12.15 மணிக்கு சபர்மதி ஆசிரமத்திற்கு அவர் செல்கிறார்.

மதியம் 1.05 மணிக்கு ‘நமஸ்தே டிரம்ப்’ நிகழ்ச்சியில் பங்கேற்கும் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், இந்திய மக்களிடையே உரையாற்றுகிறார்.

பிற்பகல் 3.30 மணிக்கு டிரம்ப், ஆக்ராவுக்கு விமானத்தில் புறப்பாட்டு செல்கிறார்.

பின்னர், இன்று மாலை 4.45 மணிக்கு தனது மனைவி மற்றும் மகளும் ஆக்ரா சென்றடைகிறார். 

அங்கிருந்து, மாலை 5.15 மணிக்கு டிரம்ப், தனது குடும்பத்தினருடன் தாஜ்மகாலை சுற்றிப் பார்க்கிறார். 

மாலை 6.45 மணிக்கு மீண்டும் அவர், டெல்லிக்கு விமானத்தில் புறப்பாட்டு செல்கிறார்.

பின்னர் இரவு 7.30 மணிக்கு, டெல்லியில் உள்ள தனியார் சொகுசு விடுதியில் டிரம்ப், தனது குடும்பத்தினருடன் தங்கி ஓய்வெடுக்கிறார்.

Donald Trump Indian tour itinerary

அதேபோல், 

நாளை முதல் நிகழ்வாக, காலை 10 மணிக்கு குடியரசுத் தலைவர் மாளிகையில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்புக்கு வரவேற்பு அளிக்கப்படுகிறது. 

பின்னர், காலை 10.30 மணிக்கு டெல்லியில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் டிரம்ப் அஞ்சலி செலுத்துகிறார்.

காலை 11 மணிக்கு ஐதராபாத் இல்லத்தில் பிரதமர் மோடியுடன் பேச்சு வார்த்தை நடத்துகிறார். அப்போது, இந்த சந்திப்பின் போது, இந்தியாவில் வசிக்கும் கிறிஸ்துவர்கள் சுதந்திரம் பற்றியும் பேச உள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டன. 

பின்னர், மதியம் 12.40 மணிக்கு, இந்தியா - அமெரிக்கா இடையே சில முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒப்பந்தங்கள் கையெழுத்தானதும், அப்போதே பிரதமர் மோடி - டிரம்ப் இருவரும் இணைந்து செய்தியாளர்களைச் சந்திக்கின்றனர். 

இரவு 7.30 மணிக்கு, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு விருந்து அளிக்கிறார்.

இறுதியாக, நாளை இரவு 10 மணிக்கு இந்தியப் பயணத்தை முடிந்துகொண்டு, ட்ரம்ப் அமெரிக்கா புறப்பாட்டுச் செல்கிறார்.