உலகளவில் கஞ்சா பயன்படுத்துவதில் டெல்லி 3வது இடம் பிடித்துள்ளதாக ஆய்வறிக்கையில் தெரியவந்துள்ளது. 

கடந்த 2018 ஆம் ஆண்டு உலகம் முழுவதும் கஞ்சா பயன்படுத்தப்பட்டது தொடர்பாக Cannabis Price Index நிறுவனம் ஆய்வு நடத்தியது. இதில், அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரில் தான் அதிகப்படியான அளவுக்குக் கஞ்சா பயன்படுத்தப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. அதாவது 77.44 மெட்ரிக் டன் அளவிற்கு அமெரிக்க மக்களால் கஞ்சா பயன்படுத்தப்பட்டுள்ளது.  

 Delhi gets third spot in the world for marijuana use

2 வது இடத்தில் பாகிஸ்தான் நாட்டின் கராச்சி நகர் இடம் பெற்றுள்ளது. அதற்கு அடுத்த இடத்தில் தான் இந்தியாவின் தலைநகரமான டெல்லியில் கஞ்சா அதிக அளவில் பயன்படுத்தப்படுவதாக Cannabis Price Index ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது கடந்த 2018 ஆம் ஆண்டு மட்டும் 38.26 மெட்ரிக் டன் அளவுக்கு டெல்லி மக்கள் கஞ்சாவைப் பயன்படுத்தி உள்ளதாகவும், இது உலக அளவில் 3 வது இடம் என்றும், அந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பட்டியலில் மும்பை மாநகரம் 6 வது இடம் பெற்றுள்ளது. மும்பை மக்கள் கடந்த 2018 ஆம் ஆண்டு 32.38 மெட்ரிக் டன் அளவுக்குக் கஞ்சாவைப் பயன்படுத்தியிருக்கிறார்கள் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவிற்கு அடுத்தபடியாக 7 வது இடத்தில் இங்கிலாந்தின் லண்டன் நகரமும், அதன் பிறகே, ரஷ்யா, கனடா நாடுகள் இடம் பெற்றுள்ளன. 

 Delhi gets third spot in the world for marijuana use

அதேபோல், ஜப்பான் மக்கள் கஞ்சாவை அதிக விலை கொடுத்து வாங்குகிறார்கள் என்றும், ஈக்வடார் மக்கள் மிக குவைான தொகையைக் கொடுத்து, கஞ்சாவை வாங்குகிறார்கள் என்றும், அந்த புள்ளி விபரங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதனிடையே, உலகளவில் கஞ்சா பயன்படுத்துவதில் டெல்லி 3வது இடமும், மும்பை 6 வது இடமும் பிடித்துள்ளதாகச் செய்தி வெளியானதால், இந்திய மக்கள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.