வங்காளதேசத்தில் மசூதியில் எரிவாயு குழாய் கசிந்து விபத்து! - உயரும் பலி எண்ணிக்கை

வங்காளதேசத்தில் மசூதியில் எரிவாயு குழாய் கசிந்து விபத்து! - உயரும் பலி எண்ணிக்கை - Daily news

வங்காளதேச தலைநகர் டாக்காவில் நரயங்கஞ்ச் என்ற மாவட்டத்தில் ஒரு மசூதி உள்ளது. இந்த மசூதியில் வெள்ளிக்கிழமை (நேற்று முன்தினம்) வழக்கம்போன மதவழிபாடு நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் 50-க்கும் அதிகமானோர் பங்கேற்றிருந்தனர்.

வழிபாட்டு நிகழ்ச்சியின் போது மசூதியின் ஜன்னல், கதவுகள் அனைத்தும் அடைக்கப்பட்டிருந்தன. அப்போது அந்த மசூதியில் அமைக்கப்பட்டிருந்த ஏ.சி.களுக்கு (ஏர் கண்டிஷனர்) செல்லும் கியாஸ் குழாயில் வாயு கசிவு ஏற்பட்டிருக்கிறது.
 
இந்த கியாஸ் கசிவு காரணமாக, அங்கிருந்த ஏ.சி.கள் அனைத்தும் திடீரென வெடித்து விபத்தை ஏற்படுத்தியது. இந்த வெடிவிபத்தால் மசூதியில் தீ விபத்தும் ஏற்பட்டது. இந்த பயங்கர விபத்து காரணமாக 16 பேர் உயிரிழந்ததாக சொல்லப்பட்டது.

மேலும், பலர் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்கள் டாக்காவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 21 பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த எண்ணிக்கை தற்போது உயர்ந்து வருகின்றது.

மேலும், இந்த விபத்து தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வங்காளதேசம் டாக்காவுக்கு வெளியில் உள்ள நரயாங்கஞ்ச் மாவட்டத்தில் உள்ள மசூதியில் வெள்ளியன்று இரவில் ஏற்பட்டுள்ள விபத்துக்கு, எரிவாயுக் குழாயில் ஏற்பட்ட கசிவே காரணம் என தீயணைப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

தற்போதைய நிலவரப்படி, விபத்தில் பலத்த தீக்காயங்களுடன் பாதிக்கப்பட்டுள்ள 37 பேர் உடனடியாக டாக்காவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. அதில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விபத்தில்  வழிபாடு செய்துகொண்டிருந்த மக்களில் ஒரு குழந்தை உள்பட 17 மக்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் எனவும் அஞ்சப்படுகிறது. இந்த விபத்து குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்

Leave a Comment