கிரிக்கெட் வீரர் ஷமியுடன் ஆடையின்றி எடுத்த புகைப்படத்தை அவரது மனைவி  ஹசின் ஜஹான் பகிர்ந்துள்ளது இணையத்தில் வைரலாகி வருகிறது.

பிரபல கிரிக்கெட் வீரர் முகமது ஷமி, தனது மனைவி ஹசின் ஜஹான் உடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், கணவன் - மனைவி இடையே கருத்து யுத்தம் நடைபெற்று, கடந்த சில ஆண்டுகளாகப் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

cricketer Shamis wife shares a bold picture

இதனால், முஹமது ஷமி மீது பாலியல் குற்றச்சாட்டு மற்றும் அவர் சூதாட்டத்தில் ஈடுபட்டார் என்று அவரது மனைவி ஹசின் ஜஹான், பல்வேறு  குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து முன்வைத்து வந்தார். 

இதையடுத்து, பி.சி.சி.ஐ. முஹமது ஷமியிடம் நடத்திய விசாரணையில், அவர் மீது எந்த குற்றமும் இல்லை என்று அறிவித்தது. இதனைத்தொடர்ந்து, முஹமது ஷமி - ஹசின் ஜஹான் இருவரும் மாறி மாறி அளித்த புகாரின் அடிப்படையில், இவர்களது வழக்கு நீதிமன்றத்தில் தற்போது நிலுவையில் உள்ளது.

cricketer Shamis wife shares a bold picture

இதனிடையே, ஹசின் ஜஹான் மீண்டும் தற்போது மாடலிங் துறைக்குத் திரும்பி உள்ளார். இதனால், ஷமி உடனான திருமண வாழ்க்கைக்குப் பிறகு, மீண்டும் சமூக வலைதளங்களில் கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அவர் தொடர்ந்து பதிவிட்டு வருகிறார்.

இந்நிலையில், முகமது ஷமியின் மனைவி ஹசின் ஜஹான், கணவர் ஷமியுடன் ஆடையின்றி எடுத்த புகைப்படத்தைத் தனது இன்ஸ்டாக்ராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

cricketer Shamis wife shares a bold picture

அந்த பதிவில், “நீங்கள் ஒன்றுமில்லாத போது நான் தூய்மையாகவும், மதிப்புடையவராகவும் இருந்தேன். தற்போது, நீங்கள் ஒரு நிலையில் உள்ளதால் நான் தூய்மையற்றவள். உண்மையை என்றும் மறைக்க முடியாது. முதலை கண்ணீர் நீண்ட நாள் பலிக்காது” என்று, ஷமியை மறைமுகமாகத் தாக்கியும் கருத்து தெரிவித்துள்ளார்.

cricketer Shamis wife shares a bold picture

கிரிக்கெட் வீரர் ஷமியின் மனைவி ஹசின் ஜஹானின் இந்த பதிவிற்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர். இதனால், கிரிக்கெட் வீரர் ஷமியுடன் அவரது மனைவி ஆடையின்றி எடுத்த புகைப்படம், தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.