கொரோனா வைரஸ் தொற்று பேச்சு வழியாகப் பரவக்கூடும் என்று, ஆயவில் தெரியவந்து உள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றுக்கு மருந்து கண்டுபிடிக்கும் பணிகள் உலகம் முழுவதும் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், மற்றொரு பக்கம் கொரோனா பற்றிய புதிய புதிய அறிகுறிகள் பற்றிய தகவலும் வெளியாகிக்கொண்டு இருக்கிறது.

Corona may spread via speech

இந்நிலையில், கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட நோயாளிகள் பேசும் போது கொரோனா பரவுவது குறித்து, அமெரிக்காவின் தேசிய நீரிழிவு மற்றும் செரிமான மற்றும் சிறுநீரக நோய்கள் ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.

இந்த ஆய்வு குறித்த முடிவுகள் அமெரிக்காவில் உள்ள தேசிய அறிவியல் அகாடமியின் புரோசிடிங்ஸ் இதழில் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

அந்த ஆய்வில், கொரோனா பாதிக்கப்பட்ட நோயாளி ஒருவர், மூடிய பெட்டியின் உள்ளே சென்று, 'ஆரோக்கியமாக இருங்கள்' என்று, 25 விநாடிகள் தொடர்ந்து சத்தம் போட்டுப் பேசியுள்ளார்.

அப்போது, நோயாளி பேசிய போது, அங்குள்ள பெட்டியில் பொருத்தப்பட ஒரு லேசர், நீர்த்துளிகளை ஒளிரச் செய்துள்ளது. அந்த நீர்த்துளிகள் சராசரியாக 12 நிமிடங்கள் காற்றில் தங்கியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Corona may spread via speech

உமிழ்நீரில் கொரோனா வைரசின் செறிவைக் கணக்கில் எடுத்துக்கொண்ட விஞ்ஞானிகள், ஒவ்வொரு நிமிடமும் சத்தமாகப் பேசினால் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வைரஸ் தொற்று கொண்ட நீர்த்துளிகள், 8 நிமிடங்கள் மற்றும் அதற்கு மேல் காற்றில் இருக்கும் என்றும், கண்டுபிடித்துள்ளனர். 

மேலும், குறிப்பிட்ட அந்த இடத்திற்கு வருபவர்களுக்கு இயல்பாகவே கொரோனா வைரஸ் தொற்று பரவும் என்றும், ஆராய்ச்சியாளர்கள் தற்போது கண்டுபிடித்துள்ளனர்.