சென்னையில் இரவு நேரங்களில் பயங்கர ஆயுதங்களுடன் உள்ளாடைகளோடு மர்ம நபர் ஒருவர் சுற்றித்திவது பற்றி சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன.

சென்னை போரூர் சமயபுரம் தெருக்களில் இரவு நேரங்களில் தங்கள் வீட்டின் முன்பு வைக்கப்படும் சிசிடிவி கேமராக்கள் எல்லாம் காலையில் பார்க்கும்போது, மேல் நோக்கி இருப்பதைப் பலரும் கவனித்துள்ளனர். தொடர்ந்து, இதுபோன்று நிகழ்வதால், சிலர் தங்களது சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து பார்த்துள்ளனர்.

Chennai Porur Thief  Unknown Man on CCTV Camera

அப்போது, நள்ளிரவு நேரத்தில் பனியன் - சட்டியுடன் உலா வரும் மர்ம நபர், கையில் கத்தி, அறுவாள் போன்ற பயங்கர ஆயுதங்களுடன் வந்து ஒவ்வொரு வீடாக வேவு பார்க்கிறார். அப்போது, தங்கள் முகம் அந்த சிசிடிவியில் தெரியக்கூடாது என்பதற்காக, முகத்தில் மாஸ்க் போன்று எதையோ மாட்டிருக்கிறார். தான் என்ன செய்கிறேன் என்பதை கேமரா படம் பிடிக்காமல் இருக்க, அந்த சிசிடிவி கோமரங்களை மேல் நோக்கித் திருப்பி வைக்கிறார்.

Chennai Porur Thief  Unknown Man on CCTV Camera

மேலும், அந்த வீட்டில் ஆட்கள் நடமாட்டாம் இருக்கிறதா, என்றும் பார்க்கிறார். குறிப்பாக, சில வீடுகளில் ஜன்னலைத் திறந்து உள்ளேயும் எட்டிப்பார்க்கிறார்.

Chennai Porur Thief  Unknown Man on CCTV Camera

இந்த காட்சிகளைப் பார்த்த, அந்த பகுதி வாசிகள், கடும் பீதியில் உரைந்துள்ளனர். மேலும், இது குறித்து அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அத்துடன், போலீசார் இரவு நேரங்களில் தினமும் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என்றும் குடியிருப்பு வாசிகள் கோரிக்கை வைத்துள்ளனர். இதனால், சென்னை போரூர் பகுதி வாசிகளிடையே, கடும் பீதி ஏற்பட்டுள்ளது.