காதலிப்பதாகக் கூறி கர்ப்பமாக்கிய சட்டக்கல்லூரி மாணவர், திருமணம் செய்ய மறுத்ததால் பாதிக்கப்பட்ட மாணவி புகார் அளித்துள்ளார்.

சென்னை சேலையூரில் உள்ள தனியார் சட்டக்கல்லூரியில் 2 ஆம் ஆண்டு படித்து வரும் 25 வயதான பாலாஜி, தன்னுடன் படித்துவரும் 25 வயதான மாணவி ஒருவரிடம் தன்னுடைய தாயார் நீதிபதி என்று கூறி அறிமுகமாகி உள்ளார்.

Chennai man pregnants women and cheats arrested

இவர்களது நட்பு நாளடைவில், காதலாக மாறி உள்ளது. இதனையடுத்து, இருவரும் தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்துள்ளனர். இதனால், மாணவி கரு உற்றுள்ளார். இதனைத்தொடர்ந்து, தன்னை திருமணம் செய்துகொள்ளும்படி, பாலாஜியை அந்த மாணவி வற்புறுத்தி வந்துள்ளார்.

இது தொடர்பாக பாலாஜி, அவருடைய தாய் கிருஷ்ணவேணி, சகோதரி சுஜாதா ஆகிய 3 பேரும் சேர்ந்து, அந்த மாணவியின் மனசை மாற்றி, எப்படியோ வலுக்கட்டாயமாகக் கருவைக் கலைக்கச் செய்துள்ளதாகத் தெரிகிறது.

பின்னர், திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்றால், 40 லட்சம் ரூபாய் வரதட்சணை தரவேண்டும் என்றும்,  இல்லாவிட்டால் பாலாஜியுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு அவமானப்படுத்தி விடுவதாகவும், பாலாஜியின் குடும்பத்தினர் மிரட்டியதாக, பாதிக்கப்பட்ட பெண் திருமங்கலம் அனைத்து மகளிர் காவல்  நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

Chennai man pregnants women and cheats arrested

இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனிடையே, காதலிப்பதாகக் கூறி கர்ப்பமாக்கியதாகச் சட்டக்கல்லூரி மாணவர் மீது சக மாணவி ஒருவர் போலீசில் புகார் அளித்துள்ள சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.