சென்னையில் 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆட்டோ ஒட்டுநர் போக்சோ சட்டத்தில் கீழ் அதிரடியாகக் கைது செய்யப்பட்டார்.

சென்னை மண்ணடி கார்ப்பரேஷன் குடியிருப்பைச் சேர்ந்த 45 வயதான மனோகரன், அந்த பகுதியில்  ஆட்டோ ஓட்டி வருகிறார்.

Chennai auto driver arrested sexual assault

இந்நிலையில், வீட்டில் விளையாடிக்கொண்டிருந்த அதே பகுதியைச் சேர்ந்த 13 வயது சிறுமியை அழைத்து, மனோகரன் பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுகிறது.

இதனால், வலியால் துடித்துப்போன சிறுமி, அழுதுகொண்டே வீட்டிற்கு வந்து, தனது பெற்றோரிடம் நடந்ததைக் கூறி மேலும் அழுதுள்ளார்.

இதனால், கடும் அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர், மனோகரன் தேடிப்பிடித்து, அவருக்கு தர்ம அடி கொடுத்தனர். 

Chennai auto driver arrested sexual assault

மேலும், போலீசாருக்கு தகவல் தெரிவித்ததையடுத்து, விரைந்து வந்த போலீசார், சிறுமியின் பெற்றோர் மற்றும் பொதுமக்கள் தாக்கியதில் படுகாயம் அடைந்த மனோகரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் சிகிச்சைக்குப் பிறகு, வழக்குப் பதிவு செய்து, மனோகரனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

அத்துடன், தன்னை தாக்கியதாக மனோகரன் அளித்த புகாரின் பேரில், சிறுமியின் பெற்றோர் மற்றும் அவரது உறவினர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதனையடுத்து, இருதரப்பினரிடமும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.