உடலில் தீ வைத்து கள்ளக் காதலனை, கட்டிப்பிடித்து உருண்ட கள்ளக் காதலி பரிதாபமாக உயிரிழந்தார்.

உல்லாச உலகில் பேரின்ப சுவை எதுவென்றால், அது கள்ளக் காதலாக இன்றைய சூழலில் நிறம் மாறி, பெரும்பாலானவர்களைக் கவர்ந்து நிற்கிறது. 

Builder burns woman for refusing sex

இனிமையிலும், இனக் கவர்ச்சியிலும் தொடங்கும் ஒவ்வொரு கள்ளக் காதலும், ஒரு நாள் கசந்தே தீரும் என்பது இயற்கையின் விதி. எப்போது, இனிமை நீங்கி அந்த கள்ளக் காதல் கசப்பைக் கக்குகிறதோ, அது முதல் இருவரில் யாரோ ஒருவருக்குப் பிரச்சனை தொடங்குகிறது என்பது  பொருள்.

உலகின் உல்லாச கள்ளக் காதல் கதைகள் எல்லாம், கொலையில் தான் முடிந்ததாகக் கடந்த கால வரலாறு பேசுகிறது. அதற்கு மேலும் ஒரு கள்ளக் காதல் கதை வலு சேர்த்து சாட்சி கூறுகிறது.

Builder burns woman for refusing sex 

தருமபுரி மாவட்டம் அதியமான்கோட்டை அருகில் உள்ள மாதேமங்கலம் பகுதியைச் சேர்ந்த பழனி கட்டிட மேஸ்திரியாக பணியாற்றி வருகிறார். 

இவருக்கு நீலா, ரத்தினம், சவுமியா என 3 மனைவிகள் இருந்தனர். இதில், 2 வது மனைவியான ரத்தினத்துடன், பெங்களூரில் தங்கி பழனி கட்டிட வேலை செய்து வந்தார்.

இதனிடையே, பழனியின் 3 வது மனைவி சவுமியா, அங்குள்ள மாதே மங்கலம் கிராமத்தில், தனது குழந்தைகளுடன் வசித்து வந்தார்.

Builder burns woman for refusing sex

அப்போது, அப்பகுதியைச் சேர்ந்த கட்டிட மேஸ்திரி 27 வயதான வேலுச்சாமி, மாதேமங்கலத்தில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு வந்து சென்றபோது, பக்கத்தில் வீட்டில் வசித்த சவுமியாவுடன் பழக்கம் ஏற்பட்டு, அது கள்ளக் காதலாக மாறி உள்ளது.

இதனால், இவர்கள் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்துள்ளனர். 

இந்நிலையில், வழக்கம் போல் கடந்த 4 ஆம் தேதி கள்ளக் காதலியின் வீட்டிற்கு வந்த வேலுச்சாமி, சவுமியாவை உல்லாசத்திற்கு வருமாறு அழைத்துள்ளார். ஆனால், அவர் வர மறுத்துள்ளார். 

இதனால், கள்ளக் காதலர்கள் இருவருக்குள்ளும் சண்டை வந்துள்ளது. இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. 

இதில் கடும் மன உலைச்சலுக்கு ஆளான சவுமியா, தன் உடலில் மண்ணெண்ணெய்யை ஏற்றி, தற்கொலை செய்துகொள்வதாக மிரட்டல் விடுத்துள்ளார்.

Builder burns woman for refusing sex

ஆனால், இதைப் பற்றி கவலைப்படாத வேலுச்சாமி, “என் ஆசைக்கு வரவில்லை என்றால், நீ சாவதே மேல்” என்று கூறிவிட்டு, தீக்குச்சியை உரசி சவுமியா மேல் தூக்கி வீசி உள்ளார்.

இதில், சவுமியா மீது தீ பற்றி எரிந்த நிலையில், அலறி அடித்துக்கொண்டு அங்கிருந்து ஓடிவந்த சவுமியா, தன் மீது தீ பற்றி வைத்த வேலுசாமியை கட்டிப்பிடித்து உருண்டுள்ளார். இதில், வேலுச்சாமி மீதும் தீ பற்றி எரிந்துள்ளது.

இதனிடையே, இருவரின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர், இருவரையும் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி சவுமியா பரிதாபமாக உயிரிழந்தார். வேலுச்சாமிக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனிடையே, தருமபுரி அருகே உல்லாசத்திற்கு வர மறுத்த கள்ளக்காதலியை, கட்டிட மேஸ்திரி தீ வைத்து எரித்த சம்பவம், அப்பகுதியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதுபோன்ற கள்ளக் காதல் கதையிலிருந்து நாம் தெரிந்து கொள்ள ஒன்றே ஒன்றுதான் இருக்கிறது. அது, இதுபோன்ற கதைகளில் நாம் அகப்படாமல் விலகி நிற்பது மட்டுமே. 

ஆக, காதலோடு மட்டுமே வாழ்வோம்! இந்த பிரபஞ்சத்தைக் காதலால் நிரப்புவோம்.