190 ஆண்களை பாலியல் பலாத்காரம் செய்த ஆணுக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

ஆணுக்கு இணை பெண்! பெண்ணுக்கு இணை ஆண்! என்பது தான், இயற்கையின்.. இறைவனின் அற்புதமான படைப்பு. எதிர் எதிர் பாலினம் என்பதால் தான், இருபாலருக்கும் இடையே.. அளவில்லா ஈர்ப்பு இருக்கிறது.

Britain youth life sentence for sexual assault on 190 people

ஆனால், இங்கே நிகழ்ந்துள்ள பாலியல் குற்றம், இறைவனுக்கு எதிரானது மட்டுமில்லை. அது, இயற்கைக்கும் எதிரானது. 

இங்கிலாந்து நாட்டின், லண்டன் மாநாரகரில் இப்படியொரு பேரதிர்ச்சியான சம்பவம் நிகழ்ந்துள்ளது. 

லண்டன் அடுத்த மான்செஸ்டர் நகரைச் சேர்ந்த 36 வயதான ரெய்ன்ஹார்ட் சினாகா தான், அந்த மிக பயங்கரமான காம கொடூரமாகத் திகழ்ந்துள்ளார்.

பல ஆண்கள் வயது மூப்பின் காரணமாகவோ, மது பழக்கத்திற்கு அடிமையானவர்கள், பாலியல் இன்பத்திற்கு அடிமையாகவோ இருப்பவர்களைக் கண்டுபிடித்து, அவர்களை தன் வீட்டிற்கு அழைத்து வந்து, அவர்களை மதுவுக்கு அடிமையாக்கி ஆழ்ந்த போதையில் சினாகா ஆக்கிவிடுவார்.

Britain youth life sentence for sexual assault on 190 people

பின்னர், அவர்கள் அளவுக்கு மீறிய போதைக்குச் சென்ற உடன், அவர்களை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு, அதைத் தனது செல்போனில் வீடியோ எடுத்தும் வைத்துக்கொள்வாராம்.

அப்படி ஒருநாள், 18 வயது இளைஞரை, மதுவுக்கு அடிமையாக்கி, ரெய்ன்ஹார்ட் சினாகா பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இடையில், வலியிலோ அல்லது போதை தெளிந்தோ அவர் கண்விழித்துப் பார்த்தபோது, கடும் அதிர்ச்சியடைந்துள்ளார்.

பின்னர், அங்கிருந்து எப்படியோ தப்பி வெளியே வந்து, அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இது குறித்து வழக்குப் பதிவு செய்த மான்செஸ்டர் மாநகரப் போலீசார், நேராக அந்த வீட்டிற்கு சென்று ரெய்ன்ஹார்ட் சினாகாவை கைது செய்து, அவரது செல்போனை வாங்கி பார்த்துள்ளனர். 

அதில், 190 ஆண்களை பாலியல் பலாத்காரம் செய்தது தொடர்பான வீடியோ இருந்துள்ளது. இதனைப்பார்த்து அதிர்ச்சியடைந்த போலீசார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். 

வழக்கை விசாரித்த நீதிமன்றம், இங்கிலாந்தில், ஒரே ஒரு தனிப்பட்ட நபர், இத்தனை பேரை பாலியல் பலாத்காரம் செய்தது இதுவே அதிகபட்சமான எண்ணிக்கை என்று கூறி, அதிர்ந்துபோனார்கள். மேலும், இவரால் மற்றவர்கள் யாரும் பாதிக்கப்படக்கூடாது என்பதால், குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பளித்தது. 

இதனிடையே, ஒரு ஆண், 190 ஆண்களை பாலியல் வன்கொடுமை செய்துள்ள சம்பவம் இங்கிலாந்தில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது,