தமிழகத்தில் வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் ,  பாஜக, பாமக, தேமுதிக ஆகியவை இடம்பெற கூட்டணி பேச்சுவார்த்தை நடைப்பெறுகிறது. யாருக்கு எத்தனை சீட் ஒதுக்குவது என பயங்கர ப்ரெஷரில் அதிமுக இருக்கிறது. காரணம் பாஜக கூடுதலாக 10 சீட்டு வரையும், பாமக 30 சீட்டும் கேட்பதாக அதிமுக தரப்பில் தெரிவிக்கபடுகிறது. 


சமீபத்தில் தமிழக வந்த அமித்ஷா , முதல்வர் எடப்பாடியுடனான சந்திப்பில் , கூட்டணி பேச்சு வார்த்தையில் பாஜகாவுக்கு அதிக இடம் கேட்க இருப்பதாக தகவல் வெளியானது. இந்த முறை கூட்டணியில் கூடுதலாக 10 சீட்டுகள் கேட்பதாகவும், அதற்கு அதிமுக தரப்பில் பெரிய அளவில் தயக்கம் காட்டியதாகவும் சொல்லப்பட்டது. 


சில தினங்களுக்கு முன் பாமக நடத்திய இட ஒதுக்கீடு ஆர்ப்பாட்டமும் கூட அதிமுக தரப்பிற்கு பயத்தை ஏற்படுத்தி அதிக தொகுதிகள் கேட்கும் நோக்கில் தான் என கருத்து நிலவியது.

தற்பொழுது அதிமுக கூட்டணியில் தாங்களே இரண்டாவது பெரிய கட்சி அதனால் தங்களுக்கு குறைந்தது 30 சீட்களுக்கு மேல் கொடுக்க வேண்டும் என பாமக வலியுறுத்தி வருகிறது. 


பாஜகவை விட எங்களுக்கு குறைவான இடம் கொடுத்தால் எப்படி ஏற்க முடியும் என்கிறது பாமக தரப்பு. தமிழகத்தைப் பொறுத்தவரையில் பாஜகவை விட பாமகாவே வலிமைவாய்ந்தது என அதிமுகாவிற்கு நன்றாகவே தெரியும். அதனால் பாஜகவிற்கு 30 இடம் கொடுத்தால் அதை விட அதிகமான இடங்கள் தான் பாமகாவிற்கு கொடுக்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ் தரப்பில் திட்டவட்டமாக இருக்கிறார்கள். 

 


ஒருபக்கம் பாஜக எப்படியாவது 30 இடங்கள் வாங்க வேண்டும் என்று அழுத்தம் கொடுக்கிறது மறுப்பக்கம் பாமக ஆர்ப்பாட்டம் நடத்தி அதிமுகாவை மிரட்டுகிறது. ஆனால் கடந்த காலங்களைப் போல 160-170 தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்பதில் அதிமுக தரப்பு கவனமாக இருக்கிறது. பாஜகவுக்கு 25, பாமகவுக்கு 20, தேமுதிகவுக்கு 15-18 என்ற கணக்கு தான் போட்டு வைத்திருக்கிறது.