“இந்தியாவில், இந்தி தெரிந்தால் தான் இந்தியர் என்ற நிலை உருவாகி உள்ளதா?” என்று திமுக எம்.பி. கனிமொழி கேள்வி எழுப்பி உள்ளார். 

சமீப காலமாகத் தமிழகம் முழுவதும் இந்தி மொழி, புகுத்தப்பட்டு வருவதாகத் தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக ரயில்வே துறை உள்ளிட்ட மத்திய அரசு அரசின் பல்வேறு துரையில் இந்தி மொழியில் வாசகங்கள் இடம் பெற்று வந்தன. அதன் தொடர்ச்சியாக நெடுஞ்சாலையின் ஓரம் தமிழகத்தின் பல இடங்களில் இந்தி மொழியில் வாசகங்கள் இடம் பெற்றன.

அது உண்மை என்பதை மெய்ப்பிக்கும் விதமாக, நாடு முழுவதும் பாஜக தலைமையிலான மத்திய அரசு மும்மொழி கொள்கையைக் கடந்த வாரம் அறிமுகப்படுத்தி உள்ளது. அதில், விருப்ப பாடமாக சமஸ்கிருதத்தைப் படிக்கலாம் என்றும் சுட்டிக் காட்டி உள்ளது. ஆனால், இதற்குத் தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில், “இதற்கு முன்பு பயன்பாட்டில் உள்ள இரு மொழி கொள்கையே இனியும் தமிழகத்தில் பயன்படுத்தப்படும்” என்று முதலமைச்சர் பழனிசாமி அறிவித்தார்.

இந்நிலையில், இந்தி மொழி தெரியாத காரணத்தினால், தமிழக எம்.பி. ஒருவருரை அவமதிக்கும் விதமாக புதிய பிரச்சனை எழுந்துள்ளது.

அதாவது, தி.மு.க. மகளிரணி செயலாளரும், தூத்துக்குடி தொகுதி எம்.பி.யுமான கனிமொழி நாடாளுமன்ற குழுக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக நேற்று சென்னை விமான நிலையத்தில் இருந்து டெல்லி புறப்பட்டுச் சென்றார். 

அப்போது, சென்னை விமான நிலையத்தில் பாதுகாப்பு சோதனையை முடித்துவிட்டுச் சென்ற போது, அங்குப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த சி.ஐ.எஸ்.எப். பெண் அதிகாரி ஒருவர், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக திமுக எம்.பி. கனிமொழியிடம் இந்தியில் பேசியிருக்கிறார்.

அதற்கு, திமுக எம்.பி. கனிமொழி, “நீங்கள் பேசும் இந்தி எனக்குப் புரிய வில்லை. ஆங்கிலத்தில் அல்லது தமிழில் பேசுங்கள்” என்று, ஆங்கிலத்தில் பதில் 
அளித்திருக்கிறார்.  ஆனால், இதனைப் பற்றி கண்டுகொள்ளாத அந்த பாதுகாப்பு அதிகாரி, “நீங்கள் இந்தியரா? இந்தி தெரியவில்லையே?” என்று கனிமொழியிடம் கேட்டாக தெரிகிறது. 

இதனால், கோபமடைந்த திமுக எம்.பி. கனிமொழி, அந்த அதிகாரியிடம் கோபமாகவே பதில் அளித்து விட்டு டெல்லிக்குப் புறப்பட்டுச் சென்றார். ஆனால், இந்த சம்பவம் தொடர்பாகக் கனிமொழி எம்.பி. தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

குறிப்பாக, அந்த பதிவில், “இந்தி தெரிந்தால் தான் இந்தியர் என்பது எப்போதில் இருந்து முடிவு செய்யப்பட்டது? என்பதை, நான் தெரிந்துகொள்ள விரும்புகிறேன். இது இந்தி திணிப்பு தான்” என்றும், திமுக எம்.பி. கனிமொழி, பகிரங்கமாகக் குற்றம்சாட்டினார். 

இதனைக் கவித்த மத்திய தொழில் பாதுகாப்புப் படையின் உயர் அதிகாரிகள், “தங்களது அதிகாரப்பூர்வ டிவிட்டர் பதிவில், “உங்களுடைய விரும்பத்தகாத அனுபவத்துக்காக வருத்தம் தெரிவிக்கிறோம்” என்று குறிப்பிட்டுள்ளனர்.

அத்துடன், “இந்த விவகாரத்தில் சரியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், குறிப்பிட்ட எந்தவொரு மொழியையும் வலியுறுத்துவது மத்திய தொழில் பாதுகாப்புப் படையின் கொள்கை அல்ல” என்றும், அதில் விளக்கம் அளித்துள்ளனர்.

எனினும், இந்த விவகாரத்தை பாஜக மூத்த தலைவர் பி.எல்.சந்தோஷ் குறிப்பிட்டு தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “தமிழகத்தில் சட்டப் பேரவைத் தேர்தலுக்கு 8 மாதங்கள் தான் இருக்கிறது. அதன் காரணமாக, இப்போது முதலே தேர்தல் பிரச்சாரம் தொடங் கிவிட்டது” என்று, கிண்டலாக அவர் பதிவிட்டுள்ளார். 

தமிழகத்தில் இந்தி திணிப்பு என்பது எவ்வளவு வேதனையான மற்றும் கவலைக்குரிய ஒரு உணர்வுப் பூர்வமான விசயமாக இருக்கும்போது, தமிழக மக்களின் உணர்வுகளை மதிக்காமல், பாஜக மூத்த தலைவர் பி.எல்.சந்தோஷ் பதிவிட்டுள்ள கருத்து, என்பது ஒட்டுமொத்த தமிழக மக்களின் மனங்களைப் புண் படுத்தும் விதமாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இத