“பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தன்னுடன் செக்ஸ் உறவு வைத்துக்கொள்ள விரும்பியதாக” சர்சையில் சிக்கிய சிந்தியா.. 15 நாட்களில் நாட்டை விட்டு வெளியேற கெடு..

“பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தன்னுடன் செக்ஸ் உறவு வைத்துக்கொள்ள விரும்பியதாக” சர்சையில் சிக்கிய சிந்தியா.. 15 நாட்களில் நாட்டை விட்டு வெளியேற கெடு.. - Daily news

“பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தன்னுடன் செக்ஸ் உறவு வைத்துக்கொள்ள விரும்பியதாக” சர்சையில் சிக்கிய சிந்தியாவை, அடுத்த 15 நாட்களில் நாட்டை விட்டு வெளியேற, இம்ரான்கான் அரசு கெடு விதித்துள்ளது பல்வேறு விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது.

அமெரிக்க வலைத்தள பெண் பதிவாளர் சிந்தியா ரிச்சி என்ற பெண்மணி, கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக பாகிஸ்தான் நாட்டில் வசித்து வருகிறார். 

சிந்தியா ரிச்சி, தொடர்ந்து பல்வேறு சர்ச்சைக்குரிய பதிவுகள் செய்து, அந்நாட்டில் மிகவும் பிரபலமாக மாறினார். இதன் காரணமாக, சிந்தியா ரிச்சியை டிவிட்டரில் மட்டும் சுமார் 3 லட்சம் பேர் அவரை பின் தொடர்கின்றனர்.

மேலும், பாகிஸ்தான் நாட்டின் மறைந்த முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோ, பற்றி அவர் தனது டிவிட்டரில் வெளியிட்ட பதிவானது, அந்நாட்டில் பெரும் கொந்தளிப்பையும், சர்சையையும் ஏற்படுத்தியது.

அதேபோல், பாகிஸ்தான் முன்னாள் உள்துறை அமைச்சர் ரகுமான் மாலிக், “என்னை பாலியல் பலாத்காரம் செய்தார்” என்று, தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டார். இந்த பதிவும், அந்நாட்டில் பெரும் சர்சையை ஏற்படுத்தியது. 

இது எல்லாவற்றுக்கும் மேலாமாக, “பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தன்னுடன் செக்ஸ் உறவு வைத்துக் கொள்ள விரும்பியதாக, சிந்தியா ரிச்சி தன்னிடம் கூறினார்” என்று, அவரது நண்பரான டி.வி. பிரபலம் அலி சலீம் பரபரப்பு குற்ச்சாட்டை வெளியிட்டார். இந்த செய்தி வெளியான அடுத்த சில நிமிடங்கிலேயே பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானை ஆட்டம் காண வைத்துவிட்டது. இதனால், பாகிஸ்தான் நாட்டின் பல்வேறு முக்கிய எதிர்கட்சிகள் பிரதமர் இம்ரான்கானுக்கு எதிராக தங்களது கண்டனங்களை தெரிவித்து வந்தனர். 

அத்துடன், “பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் பதவி விலக வேண்டும்” என்ற கோரிக்கைகளும் முன் வைக்கப்பட்டன. இதனால், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான், என்ன செய்வது என்று புரியாமல் நிலைதடுமாறிப் போனதாகவும் செய்திகள் தொடர்ந்து வெளியாகிக்கொண்டிருந்தன.

இப்படியாக தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கி வந்த சிந்தியா ரிச்சியின் விசா கடந்த மார்ச் மாதம் 2 ஆம் தேதி உடன் முடிந்து போனது. 

மேலும், அவர் மீதான வழக்கை விசாரித்த அந்நாட்டின் இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றம், அவரது விசா தொடர்பாக உள்துறை அமைச்சகம் பிறப்பித்த உத்தரவுக்கு அதிருப்தி தெரிவித்தது. அத்துடன், சிந்தியா ரிச்சிக்கு முறையான உதவிகளை வழங்க வேண்டும் என்றும், இம்ரான்கான் அரசுக்கு நீதிமன்றம் இறுதி வாய்ப்பையும் வழங்கியது.

இந்நிலையில், சிந்தியா ரிச்சியின் விசா நீடிப்பு விண்ணப்பத்தை நிராகரித்து விட்டு, அடுத்த 15 நாளில் அவர் பாகிஸ்தான் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்றும், இம்ரான்கான் அரசு அதிரடியாக உத்தரவிட்டு உள்ளது. இதன் காரணமாக, அந்நாட்டில் மீண்டும் சர்சை வெடித்துள்ள நிலையில், பெரும் பரபரப்பும் ஏற்பட்டு உள்ளது.

Leave a Comment