தமிழகத்தில் 6 மாவட்டங்கள் கொரோனா தொற்று இல்லாத மாவட்டங்களாக மாறி உள்ளன.

தமிழகத்தில் கொரோனா வைரசின் தாக்கம் ஒரு பக்கம் வேகமாகப் பரவி வரும் நிலையில், மற்றொரு பக்கம் கொரோனா பாதிப்பிலிருந்த குணமடைந்து வீடு திரும்போர் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

6 districts without corona in Tamil Nadu

இதனிடையே, மே மாதம் தொடங்கியது முதல் சென்னை கோயம்பேடு மார்க்கெட் மூலம் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் கொரோனா பரவி வருவதாகக் கூறப்பட்டது. அதன்படி சென்னை, கடலூர், அரியலூர் உள்ளிட்ட 8 மாவட்டங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டது. 

ஆனாலும், அனைத்து விதமான கடுமையான சூழலையும் மீறி கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம் உள்ளிட்ட13 மாவட்டங்களில் கொரோனா தொற்று முழு

அதன்படி, சேலம், ஈரோடு, சிவகங்கை, திருப்பூர், கோவை, நாமக்கல் ஆகிய 6 மாவட்டங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்கள்  அனைவரும் குணமடைந்து, தற்போது வீடு திருப்பி உள்ளனர். இதன் காரணமாக, இந்த 6 மாவட்டங்கள் கொரோனா தொற்று இல்லாத மாவட்டமாக தற்போது மாறி உள்ளது. 

சேலம் மாவட்டத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 11 பேரும், தற்போது குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இதுவரை, அந்த மாவட்டத்தில் 35 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, குணமடைந்துள்ளனர்.

ஈரோடு மாவட்டத்தில் ஏப்ரல் 15ம் தேதிக்குப் பிறகு யாருக்குத் தொற்று கண்டறியப்படவில்லை. இதனால், ஆரஞ்சு மண்டலத்திலிருந்து பச்சை மண்டலமாக மாறி உள்ளது.

கோவை மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட 144 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். மேலும், கடந்த பத்து நாட்களாகக் கோவையில் யாருக்கும் புதிய பாதிப்பு கண்டறியப்படவில்லை.

6 districts without corona in Tamil Nadu

திருப்பூர் மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட 114 பேரில், 112 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். கோயம்பேடு காய்கறி சந்தை தொடர்புடைய ஆட்டோ ஓட்டுநர்கள் இருவர் மட்டும் கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தற்போது அவர்களும் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

கடந்த 9 நாட்களாகத் திருப்பூரில் புதிய தொற்று யாருக்கும் கண்டறியப்படவில்லை. நாமக்கல் மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட 77 பேரும் சிகிச்சை முடிந்து வீடு திரும்பி உள்ளனர். நேற்று மட்டும் ஒரே நாளில் 15 பேர் குணமடைந்தனர்.

கடந்த 10 நாட்களுக்குப் பிறகு, சிவகங்கையில் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது சற்று முன்பு உறுதி செய்யப்பட்டது. 

மேலும், தமிழகத்தின் 8 மாவட்டங்களில் 10க்கும் குறைவானவர்களே, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 

அதன்படி, நீலகிரியில் 3 பேரும், தர்மபுரியில் 4 பேரும், புதுக்கோட்டையில் 4 பேரும், திருவாரூரில் 4 பேரும், சேலத்தில் 5 பேரும், கன்னியாகுமரியில் 9 பேரும், தூத்துக்குடியில் 9 பேரும், திருப்பத்தூரில் 10 பேர் என, இந்த 8 மாவட்டங்களில் 10 க்கும் குறைவானவர்களே தற்போது, கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.