அமெரிக்காவில் கொரோனாவுக்கு 7.64 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 40,555 ஆக அதிகரித்துள்ளது. 

உலக வல்லராசகாவும், மற்ற உலக நாடுகளைக் காட்டிலும் எதிலும் நம்பர் ஒன் நாடாகவும் அறியப்பட்ட அமெரிக்கா, இன்று கொரோனா வைரஸ் தொற்றிலும் நம்பர் ஒன்னாக திகழ்கிறது.

 40,555  Thousand dead in US due to Corona

உலகிலேயே, கொரோனாவுக்கு அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாடாக அமெரிக்கா இருப்பது, மற்ற உலக நாடுகளை ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளது. 

அமெரிக்காவில், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும், 1,997 பேர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, அங்கு பலி எண்ணிக்கை தற்போது 40,555 ஆக அதிகரித்துள்ளது. அமெரிக்காவில் மட்டும் இதுவரை 7 லட்சத்து 64 ஆயிரம் பேர் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

மேலும், அமெரிக்காவில் 6 லட்சத்து 24 ஆயிரம் பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்த நிலையில், 54 ஆயிரம் பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

 40,555  Thousand dead in US due to Corona

அதேபோல், அமெரிக்காவில் கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத வகையில் கச்சா எண்ணெய் விலை 20 சதவீதம் குறைந்துள்ளது. இதனால், அந்நாட்டில் பேரல் ஒன்றின் விலை 15 டாலருக்கு கீழ் வர்த்தகம் செய்யப்படுகிறது.

அத்துடன், அமெரிக்காவில் இதுவரை 2 கோடி பேர் வேலை இழந்து தவித்து வருகின்றனர். இதனால், நாட்டின் பொருளாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.