#IPL2022 நடப்பு சீசனில் முதல் 3 போட்டிகளில் CSK தொடர்ந்து தொடர் தோல்விகளை சந்தித்து வருவதால், “CSK உடனடியாக சரிசெய்ய வேண்டியது என்ன?” என்பது குறித்து தற்போது பார்க்கலாம்..

#IPL நடப்பு சீசனில் CSK தொடர்நது 3 போட்டிகளிலும் தோல்வி அடைந்ததுடன், ஹாட்ரிக் தோல்விகளையும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சந்திப்பது #IPL வரலாற்றில் இதுவே முதல் முறை.

இந்த சூழலில் தான், #CSK உடனடியாக தன்னை தானே சரி செய்துகொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயமாகி உள்ளது.

CSK தோல்விக்கு இயற்கையாகவே அமைந்த சில காரணங்கள்

- #CSK வின் நட்சத்திர பந்துவீச்சாளர் தீபக் சாஹர் காயம் காரணமாக விளையாடாமல் போனது முதல் காரணம். 

- முதல் போட்டியின் போது, விசா சிக்கலால் மொயின் அலி இடம் பெறாமல் போனது 2 வது காரணம்.

- #IPL2022 சீசன் தொடங்குவதற்கு முன்பு தோனி, கேப்டன் பதவியை விட்டு விலகியது ஒரு காரணம். இதனால்,  #CSK அணியில் ஒரு நிலையற்ற தன்மை தற்போது உருவாகி இருப்பதாகவும் கூறப்படுகிறது.

- #CSK அணியின் கேப்டன் ஜடேஜா என்றாலும், முழ பொறுப்பையும் அவர் வசம் இல்லை என்றே கூறப்படுகிறது. இதனால், கேப்டன் ஜடேஜா தற்போது பொம்மை கேப்டனாக செயல்படுகிறார் என்றும் கூறப்படுகிறது. 

- #CSK அணியில் கேப்டன் ஜடேஜா, முன்னாள் கேப்டன் தோனி என இரட்டை தலைமை இருப்பது, அணிக்கும் சரியாக அமையவில்லை என்றும் கூறப்படுகிறது.

CSK உடனடியாக சரிசெய்ய வேண்டிய விசயங்கள்

- முதல் 2 மேட்ச்லயும் சொதப்பிய பௌலிங்கிலேயே தேறிட்டோம் என்று  #CSK சொன்னாலும், இன்னும் தேற வேண்டிய தூரம் நிறையவே இருக்கிறது என்பது தான் உண்மை.

- #CSK அணியில் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு போதிய அனுபவம் இல்லை என்றால், அவர்களை பயன்படுத்துவதற்கு பதிலாக, இந்திய சுழற்பந்து வீச்சாளர்களை பயன்படுத்தலாம். 

- லக்னோ அணிக்கு எதிரான கடந்த போட்டியில்  #CSK செய்த தவறு இந்த விசயத்தில் தான்.

-  #CSK அணியில் தற்போது வேகப்பந்து வீச்சில் தான் முழு பிரச்சினை என்றால் பிராவோ, பிரிட்டோரியஸை மட்டுமே மையமாக வைத்து, பந்துவீச்சை புதிதாக கட்டமைக்கலாம்.

- ராஜவர்த்தனே ஹங்கர்கேகர் போன்ற மிக திறமையான மற்றும் அதிரடியான ஆல்ரவுண்டரை போட்டிக்கு வெளியே பெஞ்சில் ஓரமாக உட்கார  வைத்து வேடிக்கை பார்ப்பது எதற்காக? 

- ஹங்கர்கேகர் அதிவேகத்தில் பந்துவீச கூடியவர் என்பது எல்லோருக்குமே தெரியும். இவரை அணியில் தேர்வு செய்யாமல் இருப்பதற்கு என்ன காரணம்? அதை பற்றி ஏன் அணி நிர்வாகம் யோசிக்க வில்லை? முடிவு எடுக்கவில்லை?

- எந்த காரணத்தைக்கொண்டும் அனுபவம் இல்லாத புதிய வீரர்களை கொண்டு கடைசி 2 ஓவர்களை பந்து வீச வைக்க கூடாது. இந்த தவறை, கடந்த போட்டியில் #CSK செய்தது. அதனால், தோல்வியை தழுவியது.

- பிராவோ, பிரிட்டோரியஸ், ஹங்கர்கேகர் என 3 வேகப்பந்து வீச்சாளர்கள் என்று ஒருபுறம்; ஜடேஜா, மொயின் அலி, பிரசாந்த் சோலங்கி என 3 சுழற்பந்து வீச்சாளர்களையும் வைத்து #CSK அணியில் புதிய யுத்திகளை மாற்றி அமைக்க வேண்டிய காலத்தின் கட்டாயம் ஆகி உள்ளது. 

- இந்திய வீரர் முகேஷ் சௌத்ரியின் பந்தை எதிர் அணியினர் எல்லோரும் அடிக்கிறார்கள் என்றால், அவருக்கு ஏன் தொடர்ந்து வாய்ப்புகள் தர வேண்டும்?

- காயம் காரணமாக ஓய்வில் உள்ள தீபக் சாஹர், அணிக்குள் வரும் வரை அணியில் இருக்கும் குறையை இப்படி சரி செய்தால், #CSK அடுத்தடுத்த போட்டிகளில் மீண்டு எழுவதோடு வெற்றி நிச்சயம்.

- பேட்டிங்கிற்கு என்று #CSK அணியில் 10 பேர் இருக்காங்க, விடுங்க பாத்துக்கலாம் என்றால், அந்த 10 பேரும் இப்போது ஃபார்மில் இல்லையோ என்று தான் நினைக்கத் தோன்றுகிறது. 

- #CSK ஓபனர் ருத்துராஜ், கடந்த மூன்று மேட்ச்களிலும் சரியாகவே விளையாட வில்லை. இவர், கடந்த 3 மேட்ச்களிலும் சரியாக 4 வது பந்தில் சொல்லி வச்சமாதிரி அவுட்டாகி வெளியேறி இருக்கிறார்.

- #CSK ஓபனர் ருத்துராஜ் ஃபார்மில் இல்லை என்றால், அவருக்கு ஒன்று அல்லது இரண்டு போட்டிகளில் ஓய்வு அளித்துவிட்டு மற்ற வீரர்களுக்கு வாய்ப்புகள் வழங்கலாம்.

- கேப்டன் என்கிற பொறுப்போடு களமிறங்கினார் ஜடேஜா, தனக்குள் சுமை இருப்பது போலவே விளையாடி வருகிறார்.