#IPL2022 சீசனில் வாழ்வா - சாவா போட்டியில், விராட் கோலியின் அதிரடியான ஆட்டத்தால்,  #GT குஜராத்தை வீழ்த்திய #RCB பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி வெற்றி பெற்று உள்ள நிலையில், ப்ளே ஆஃப் சுற்றுக்கு செல்ல டெல்லி அணியை, மும்பை அணி வீழ்த்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு உள்ளது.

#IPL2022 சீசனின் லீக் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், தற்போது இறுதிக் கட்டத்தை எட்டி உள்ளன.

அதன் படி, நேற்று இரவு  நடைபெற்ற 67 வது லீக் போட்டியில் #RCB அணியும், #GT அணியும் மோதின.

ப்ளே ஆஃப் ரேஸ்சில் முதல் இடத்தில் இருக்கும் #GT அணியும், அது ப்ளே ஆஃப் சுற்று ரேஸில் இருந்தும், அதனை இன்னும் உறுதிப்படுத்தாத #RCB அணியும், நேற்றைய போட்டியில் களம் இறங்கியது. அத்துடன், இந்த போட்டியது, #RCB அணிக்கு வாழ்வா - சாவா போட்டியாக இருந்தது.

அப்படியான வாழ்வா - சாவா கட்டாயத்தில் களமிறங்கிய இந்த போட்டியில் டாஸ் வென்ற #GT குஜராத் அணியின் கேப்டன் ஹர்டிக் பாண்ட்யா, முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். 

அதன் படி, முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய #GT குஜராத் அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 168 ரன்கள் மட்டுமே எடுத்தது. 

இதில், #GT குஜராத் அணியின் கேப்டன் ஹர்டிக் பாண்ட்யா அதிகபட்சமாக 62 ரன்கள் எடுத்தார். 

இதனையடுத்து, 169 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய #RCB பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் தொடக்க வீரர்களாக கேப்டன் டூபிளசிஸ் - விராட் கோலி ஜோடி களம் இறங்கினர். 

இதில், இந்த 2 வீரர்களும் இது வரை இல்லாத அளவுக்கு அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிலையில், இந்த போட்டியில் பொறுப்பாக விளையாடிய கேப்டன் டூபிளசிஸ் 38 பந்துகளில் 44 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 

இதனையடுத்து, மெக்ஸ்வெல் களமிறங்கிய நிலையில், அவருடன் ஜோடி சேர்ந்து மிரட்டிய விராட் கோலி, இந்த சீசனில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிரடியாக விளையாடி 54 பந்துகளில் 73 ரன்கள் குவித்து அவுட்டானார். அதே நேரத்தில், மேக்ஸ்வெல் 18 பந்துகளை சந்தித்த நிலையில், 5 பவுண்டர்கள் 2 சிக்சர்களுடன் 40 ரன்கள் குவித்தார்.

இதன் காரணமாக, #RCB பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி 18.4 ஓவரில் 2 விக்கெட்டுகளை இழந்த 170 ரன்கள் சேர்த்து, #GT குஜராத் டைட்டன்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி, #RCB பெங்களூரு அணி அசத்தலான வெற்றியைப் பெற்றது. 

#RCB அணியின் இந்த வெற்றியின் மூலமாக, பெங்களூர் அணி புள்ளிப்  பட்டியலில் மீண்டும் 4 வது இடத்திற்கு முன்னேறி, தனது ப்ளே ஆஃப் வாய்ப்பை தற்போது தக்க வைத்துக் கொண்டு உள்ளது. 

ஆனால், வரும் 22 ஆம் தேதி நடைபெற இருக்கும் மும்பை இந்தியன்ஸ் - டெல்லி அணிகளுக்கு இடையேயான போட்டியின் முடிவை பொறுத்தே #RCB அணியின் ப்ளே ஆஃப் வாய்ப்பு உறுதியாகும்.

அதாவது, மும்பை உடனான அந்த போட்டியில் டெல்லி அணி தோற்கும் பட்சத்தில், #RCB அணி ப்ளே ஆஃப் சுற்றில் எளிதாக சென்று விடும். ஒருவேளை இந்த போட்டியில் டெல்லி அணி வெற்றி பெறும் பட்சத்தில் ரன் ரேட் அடிப்படையில் #RCB பெங்களூரு அணி சற்று பின்தங்கும்.

அதே போல், நடப்பு சாம்பியனான #CSK சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 13 ஆட்டங்களில் விளையாடி 4 வெற்றி, 9 தோல்வியுடன் 8 புள்ளிகள் பெற்று 9 வது இடத்தில் இருக்கிறது. இந்த நிலையில் தான், முன்னாள் சாம்பியனான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன், இன்று #CSK அணி மோதி விளையாடுகிறது. இன்றைய போட்டியில், ராஜஸ்தான் அணியை  #CSK சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீழ்த்தினால், டெல்லி அணிக்கு ப்ளே ஆஃப் சுற்றில் மேலும் ஒரு வாய்ப்பு கிடைக்கும் என்று நம்பப்படுகிறது. இதனால், இன்றைய போட்டி, பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.