#IPL2022 சீசனில் #CSK சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக மீண்டும் தோனி நியமிக்கப்பட்டு உள்ளார்.

#IPL2022 15 வது சீசன் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்றுக்கொண்டு இருக்கிறது. இந்த ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் தற்போது வரை 43 போட்டிகள் நடந்து முடிந்து உள்ள நிலையில், தற்போது 44 வது ஆட்டமானது நடைபெற்றுக்கொண்டு இருக்கிறது.

அத்துடன், #IPL2022 15 வது சீசனில் சென்னை அணியானது இதுவரை விளையாடி உள்ள 8 போட்டிகளில், 2 போட்டிகளில் மட்டும் வெற்றி பெற்று உள்ளது.

அதே நேரத்தில், இந்த 15 வது சீசனில் எப்போதும் போல் வழக்கமான 8 அணிகளுடன் கூடுதலாக லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ், குஜராத் டைட்டன்ஸ் என 2 அணிகளும் புதிதாக சேர்ந்து உள்ளதால், கூடுதலான எதிர்ப்பு ஏற்பட்டு இருக்கிறது.

ஆனால், கடந்த  சீசன் வரை சென்னை அணியின் கேப்டன் ஆக இருந்த மகேந்திரசிங் தோனி, போட்டிகள் தொடங்க சில நாட்கள் மட்டுமே இருந்த நிலையில், “இந்த சீசனில் #CSK அணியின் கேப்டன் பதவியை விட்டு விலகுவதாக” திடீரென்று அறிவித்தார். இதனால், “#CSK சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் புதிய கேப்டனாக இளம் வீரர் ஜடேஜா செயல்படுவார்” என்றும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் அறிவித்தது.

குறிப்பாக, “கேப்டன் பொறுப்பில் இருந்து தோனி விலகினாலும், வீரராக அணியில் தோனி தொடர்வார்” என்றும், சென்னை அணி நிர்வாகம் அப்போது அறிவித்தது.

முக்கிய ஐபிஎல் போட்டிகள் இந்தியாவில் தொடங்கப்பட்டதிலிருந்து, சென்னை அணியில் முதல் போட்டியில் இருந்து மகேந்திரசிங் தோனி கேப்டனாக தொடர்ந்து வந்தார். இப்படியான நிலையில் தான், “சென்னை சூப்பர் கிங்கிஸ் அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து மகேந்திரசிங் தோனி விலகுவதாக” அறிவித்து உள்ளது, சென்னை ரசிர்களை கடும் அதிர்ச்சியில் அப்போது ஆழ்த்தி இருந்தது.

அத்துடன், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் புதிய கேப்டனாக ஜடேஜா நியமனம் செய்யப்பட்டதற்கு, பலரும் வாழ்த்துகள் தெரிவித்து வந்த நிலையில், “சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து தோனி விலகியது, ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்றும், ஏமாற்றம் அளிக்கும் வகையில் உள்ளது” என்றும், அவரது ரசிகர்கள் பலரும் தொடர்ந்து கருத்து தெரிவித்து வந்தனர்.

அதற்கு ஏற்பதான், சென்னை அணி இது வரை விளையாடிய 8 போட்டிகளில், 2 போட்டிகளில் மட்டும் வெற்றி பெற்று இருக்கிறது. 

மேலும், நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் ஜடேஜா கேப்டனாக நியமிக்கப்பட்டது முதல் தற்போது வரை, ஜடேஜா போட்டியில் சரியாக விளையாட வில்லை என்கிற விமர்சனம் ஒரு பக்கமும், மற்றொரு புறம் எப்போதும் இல்லாத வகையில், இந்த #IPL2022 சீசனில் தொடர்ந்து 6 தோல்விகளை புதிய கேப்டன் ஜடேஜா தலைமையில் #CSK அணியானது சந்தித்து உள்ளது” என்கிற விமர்சனமும் கடுமையாக முன் வைக்கப்பட்டு வந்தது.

இதனால், #CSK அணியானது இனி வரும் 6 போட்டிகளிலும் கண்டிப்பாக வெற்றிப் பெற்றாக வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளது. அப்படி, இனி வரும் 6 போட்டிகளிலும் வெற்றிப் பெற்றால் மட்டுமே,  #CSK அணியானது இந்த சீசனில் பிளே ஆஃப் சுற்றை உறுதி செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளது.

குறிப்பாக, நடப்புச் சாம்பியனாக இந்த தொடரில் நுழைந்த சென்னை அணியானது, தொடர்ந்து தொடர் தோல்விகளால் அறிமுக அணிகளிடம் எல்லாம் தோல்வியுற்று, கிட்டத்தட்ட பிளே ஆஃப் சுற்றை விட்டு வெளியேறி விட்டதாக விமர்சிக்கப்பட்டு வந்தது.

இதன் காரணமாக, #CSK அணியின் கேப்டன் பொறுப்பை ஜடேஜா, மீண்டும் தோனியிடம் ஒப்படைத்து இருக்கிறார்.

இதனால், “எஞ்சி உள்ள அனைத்து போட்டிகளிலும் இனி தோனியே கேப்டனாக செயல்படுவார்” என்று, #CSK அணி நிர்வாகம் அதிரடியாக தற்போது அறிவித்து உள்ளது.

இப்படியாக, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக தோனி மீண்டும் பதவி ஏற்று உள்ளது, சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, #IPL2022 சீசனில் சற்று முன்னதாக நடைபெற்ற 43 வது லீக் போட்டியில், பெங்களூரு அணியை வீழ்த்தி, குஜராத் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சூப்பர் வெற்றியை பதிவு செய்துள்ளது.

தற்போது,  #IPL2022 சீசனின் 44 வது லீக் போட்டியில் ராஜஸ்தான் - மும்பை அணிகள் விளையாடி வருகிறது.