சென்னை அணியை வீழ்த்தி லக்னோ அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றிருந்தாலும், தோனி சத்தமில்லாமல் ஒரு புதிய சாதனையை படைத்து உள்ளார்.

2022 IPL தொடரின் நேற்று நடைபெற்ற 7 வது போட்டியில் #CSK சென்னை சூப்பர் கிங்ஸ் - #LSG லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதின.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது தொடக்க ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா அணியிடம் மண்ணை கவ்விய நிலையில் தான், எப்படியாவது வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற உறுதியுடன் களம் கண்டது.

அதே போல், இந்த ஆண்டு புதிதாக அறிமுகம் ஆன லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும், தனது முதல் போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்சிடம் படு தோல்வி அடைந்திருந்த நிலையில் தான், #CSK சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தி எப்படியும் வெற்றிப் பெற வேண்டும் என்ற நோகத்தில் அந்த கணியும் களம் கண்டது.

இப்படியாக, இரு அணிகளும் தங்களது முதல் தோல்வியில் இருந்து மீள நேற்றைய போட்டியில் பெரிய அளவில் சண்டை செய்ய தொடங்கின.

இந்த போட்டியில் டாஸ் வென்ற லக்னோ, முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் பேட்டி செய்த சென்னை அணியில் தொடக்க வீரராக களமிறங்கிய ருதுராஜ் - ராபின் உத்தப்பா களம் இறங்கினர். இதில், ருதுராஜ் 1 ரன் எடுத்திருந்த போது ரன் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். 

ஆனால், மறுமுனையில் இருந்த ராபின் உத்தப்பா லக்னோ அணியின் பந்து வீச்சை வெளுத்து வாங்கினார். இதனால், பவர் பிளேவின் முடிவில் லக்னோ பந்து வீச்சாளர்களை திணற போக 60 ரன்களுக்கும் மேல் சென்னை அணி குவித்திருந்தது.

அத்துடன், 27 பந்துகளில் 50 ரன்கள் அடித்து உத்தபா அவுட்டான நிலையில், பின்னர் வந்த மொயின் அலி அதிரடியாக விளையாடி 22 பந்துகளில் 35 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

அதன் பிறகு வந்த சிவம் துபே - ராயுடு ஜோடி லக்னோ பந்து வீச்சாளர்களை தெறிக்கவிட்டனர். அப்போது, சிவம் துபே 49 ரன்களில் ஆட்டமிழந்த நிலையில், கடைசி நேரத்தில் களமிறங்கிய தோனி, சந்தித்த முதல் 2 பந்துகளிலே சிக்ஸர், பவுண்டரி என தெறிக்கவிட்டார். தோனி, 6 பந்துகளில் 16 ரன்கள் சேர்த்தார். இதன் மூலமாக, தோனி அனைத்து விதமான 20 வது ஓவர் போட்டிகளிலும் ஒட்டுமொத்தமாக சேர்த்து 7 ஆயிரம் ரன்களை கடந்து சத்தமே இல்லாத புதிய சாதனையை படைத்தார். அந்த வகையில், இந்த சாதனையை படைக்கும் 6 வது இந்திய வீரர் என்ற பெருமையையும் தோனி பெற்று உள்ளார். 

மேலும், #CSK சென்னை சூப்பர் கிங்ஸ் 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 210 ரன்கள் குவித்தது. 211 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சற்று கடினமான இலக்குடன் களமிறங்கிய லக்னோ அணியின் தொடக்க வீரர்களான ராகுல் - டி காக் ஜோடி, முதல் ஓவரில் சற்று நிதானமாக விளையாடிய நிலையில், அடுத்தடுத்த ஓவர்களில் டாப் கியரில் வேகம் எடுத்தனர்.

ராகுல் 40 ரன்களுக்கும், டீ காக் 61 ரன்களும் எடுத்து அவுட்டான நிலையில், பின்னர் வந்த எவின் லூயிஸ் அதிரடியாக விளையாடி அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றார். அவர், வெறும் 23 பந்துகளில் 3 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகளுடன் 55 ரன்கள் சேர்த்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் அணியின் வெற்றிக்கு துணை நின்றார்.

அதே போல், எதிர் முனையில் நின்ற இளம் புயல் பதோனி, 9 பந்துகளில் 19 ரன்கள் விளாசி, லக்னோ அணியின் வெற்றிக்கு வித்திட்டார். 

இதனால், 9.3 ஓவர்களிலேயே211 ரன்கள் என்ற இலக்கை 4 விக்கெட்டுகள் இழப்புக்கு, #LSG லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி எட்டிப் பிடித்து தனது முதல் வெற்றியை பதிவு செய்தது. 

இந்த போட்டியில் சென்னை அணியில் சிறந்த பவுளர்கள் இல்லாமல் போனதே முதல் காரணம் என்று விமர்சிக்கப்படுகிறது. அதுவும், பவர்ப்ளேயில் சென்னை அணியின் பந்துவீச்சு ரொம்பவே சுமாராக இருந்தது என்றும், மிகப் பெரிய அளவில் விமர்சனங்கள் எழுந்து உள்ளன.

இப்படியாக,  #CSK விளையாடிய முதல் இரு போட்டிகளிலும் படு தோல்வியை சந்தித்திருக்கிறது சென்னை சூப்பர் கிங்ஸ். 

இதனிடையே, சென்னை அணிக்கு மிக சிறந்த பவுளர்களே அணிக்கு அவசர தேவை என்பதையே, கடந்த இரு போட்டிகளும் உணர்த்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.