சன் ரைசர்ஸ் ஐதராபாத்- லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன.

ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி 2008-ம் ஆண்டில் உதயமானது. ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றுள்ள இந்த ‘சரவெடி’ ஆட்டம் ஆண்டுதோறும் இந்திய கிரிக்கெட் வாரியம் சார்பில் நடத்தப்படுகிறது. இதன்படி 15-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா மும்பையில் கடந்த வாரம் தொடங்கியது.
 
இந்நிலையில் இந்த முறை குஜராத் டைட்டன்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் புதிதாக அறிமுகம் ஆவதால், அணிகளின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது. இதனால் அணிகள் மோதும் முறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. அதிக தடவை ஐ.பி.எல். கோப்பையை வென்ற அணிகள், அதிக முறை இறுதி சுற்றுக்குள் நுழைந்த அணிகள் என்ற அடிப்படையில் அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.

மேலும் ‘ஏ’ பிரிவில் 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகளும், ‘பி’ பிரிவில் 4 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ், ஐதராபாத் சன்ரைசர்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், பஞ்சாப் கிங்ஸ், குஜராத் டைட்டன்ஸ் ஆகிய அணிகளும் இடம் பிடித்துள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோத வேண்டும். எதிர்பிரிவில் உள்ள 5 அணிகளில் 4 அணிகளுடன் தலா ஒரு முறையும், தங்களுக்கு நிகரான அணியுடன் மட்டும் 2 முறையும் மோத வேண்டும். அதாவது ஒவ்வொரு அணியும் 14 லீக் ஆட்டங்களில் விளையாட வேண்டி இருக்கும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முந்தைய பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெறும்.

அதனைத்தொடர்ந்து இதற்கு மத்தியில் ஷிகர் தவான், ஷாருக்கான் பஞ்சாப், மேக்ஸ்வெல், விராட் கோலி பெங்களூரு, வார்னர், ரிஷாப் பண்ட் டெல்லி, நிகோலஸ் பூரன் ஐதராபாத், லோகேஷ் ராகுல் லக்னோ, ரோகித் சர்மா, இஷான் கிஷன் மும்பை, ஹர்திக் பாண்ட்யா குஜராத், சஞ்சு சாம்சன், ஜோஸ் பட்லர் ராஜஸ்தான், ஸ்ரேயாஸ் அய்யர் கொல்கத்தா, ருதுராஜ் கெய்க்வாட் சென்னை உள்ளிட்டோரின் அதிரடி ஜாலம் இந்த சீசனில் கவனத்தை ஈர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இந்த தொடரில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் சன் ரைசர்ஸ் ஐதராபாத் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ஒரு போட்டியில் விளையாடியுள்ள ஐதராபாத் அணி அந்த போட்டியின் தோல்வியுடன் புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. லக்னோ அணி 2 போட்டிகளில் விளையாடி ஒரு வெற்றி ஒரு தோல்வி என புள்ளி பட்டியலில் 6-வது இடத்தில் உள்ளது. முதல் வெற்றியை பெற ஐதராபாத் அணியும் வெற்றி பாதையை தொடர லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் போராடும் என்பதால் இன்றைய போட்டியில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.

அதனைத்தொடர்ந்து இன்று இரு அணிகளுக்கும் இடையிலான இந்த போட்டி இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி பேட்டிங்கை எடுத்துக்கொண்டால், வில்லியம்சன், அபிஷேக் சர்மா, ராகுல் திரிபாதி, நிக்கோலஸ் பூரன், எய்டன் மார்க்ரம், அப்துல் சமத் என பெயரளவில் பலமாக உள்ளது. ஆனால், கடந்த போட்டியில் ராஜஸ்தான் பந்துவீச்சில் இதே பேட்டிங் வரிசைதான் சீட்டுக்கட்டாக சரிந்தது. எனவே, இவர்கள் இன்றைய ஆட்டத்தில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். ரோமாரியோ ஷெப்பேர்டு, வாஷிங்டன் சுந்தர் ஆகியோரும் பேட்டிங்கிற்கும் பலம் சேர்க்கின்றனர்.ipl