SRH vs RR க்கு இடையேயான போட்டியில் தேவைக்கு அதிகமாக பௌலர்களை ஐதராபாத் வைத்திருந்த போதிலும், ராஜஸ்தான் அணி பவர்ப்ளேயிலேயே ஆட்டத்தை முடித்து வைத்து, வெற்றி வாகை சூடியிருக்கிறது. 

SRH vs RR க்கு இடையேயான இந்த போட்டி நேற்று இரவு நடைபெற்றது. இந்த போட்டியில், ஐதராபாத் 2 வதாக பேட்டிங் செய்த போதுதான் ரசிகர்களுக்கு ஒரு விசயம் புரிந்தது. அதாவது, ஐதராபாத் அணியின் ஏல தேர்வுகள், அவர்களின் பழைய பாரம்பரிய திட்டத்தை இந்த முறையும் இன்னும் தீவிரமாகச் செயல்படுத்த நினைத்தார்கள் என்பதும் தெளிவாகவே தெரிந்தது. 

குறிப்பாக, ஐதராபாத் அணியில், தேவைக்கு அதிகமாகவே இந்த முறையும் பவுலர்கள் அதிகமாகவே உள்ளனர். ஆனால், “ஐதராபாத் அணியின் பிளான் என்ன?” என்ற கேள்விக்கு மட்டும் போட்டி முடியும் வரை விடை கிடைக்கவே இல்லை.

ஐதராபாத் அணியில், வேகப்பந்து வீச்சாளர்களாக புவனேஷ்வர் குமார், நடராஜன், கார்த்திக் தியாகி, உம்ரான் மாலிக் என்று, இந்திய வேகப்பந்து வீச்சாளர்களின் பட்டியல் கொஞ்ம் பெரிது. 

அதே போல், வெளிநாட்டு வேகப்பந்து வீச்சாளராக ரோமரியோ ஷெப்பர்டு மார்க்கோ யான்சன், சீன் அபாட், ஃபசல்ஹாக் ஃபரூக்கி என்று வேகபந்து வீச்சாளர்கள் மட்டும் 7,8 பேர் உள்ளனர். இவர்களுடன், ஸ்பின் பவுலராக  வாஷிங்டன் சுந்தர் இருக்கிறார். இப்படியாக நீண்ட பவுலர் பட்டியலை கொண்ட ஐதரபாத் அணி, தனது பெரிய பவுலிங் படையுடன் ராஜஸ்தான் அணியுடன் மோதியது.

இந்த போட்டியின் போது, சமீபத்திய IPL டி20 போட்டிகளின் ட்ரெண்ட் படியே டாஸை வென்ற சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் கேப்டனான வில்லியம்சன், முதலில் பந்து வீச்சையே தேர்வு செய்தார்.

அதன்படி, ராஜஸ்தான் அணிக்காக யாஷஸ்வி ஜெய்ஸ்வால் - பட்லர் ஜோடி, களத்தில் இறங்கி இந்த இன்னிங்ஸை தொடங்கி வைத்தது.

இவர்கள் இருவரும் கொஞ்சம் கூட பாரபட்சம் பார்க்காமல் ஐதரபாத் அணியின் பெரிய பலம் என்று நம்பிக்கொண்டிருந்த ஒட்டுமொத்த பவுலர்களின் பந்துகளையும் சும்மா தெறிக்கவிட்டனர். இவர்கள் இருவரும் முதல் விக்கெட்டுக்கு 58 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து மிகவும் வலுவான அடித்தளத்தை ஆழமாகவே அமைத்துக் கொடுத்தனர். 

அந்த வகையில், ஜெய்ஸ்வால் 20 ரன்களும், பட்லர் 35 ரன்கள் சேர்த்த நிலையில் அவுட் ஆகி வெளியேறினர். அடுத்து வந்த கேப்டன் சஞ்சு சாம்சன் அதிரடியாக விளையாடி 3 பவுண்டரிகள், 5 சிக்ஸர்கள் விளாசி வானவேடிக்கை காட்டி 55 ரன்கள் சேர்த்தார். அடுத்தடுத்து வந்த தேவ்தத் படிக்கல் உள்ளிட்ட மற்ற வீரர்களும் ஐதரபாத் அணியின் பந்து வீச்சை துவம்சம் செய்தனர்.

இதனால், ராஜஸ்தான் அணியானது 20 ஓவர்கள் முடிவில் வெறும் 6 விக்கெட் இழப்பிற்கு 210 ரன்கள் குமித்து வைத்தது. 

இதன் காரணமாக, 211 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஐதராபாத் அணி களமிறங்கியது. ஆனால், அந்த அணியில் தொடக்க வீரராக களமிறங்கிய கேன் வில்லியம்சன் 2 ரன்கள் எடுத்த நிலையில் பிரசித் கிருஷ்ணா பந்துவீச்சில் தேவ்தத் படிக்கலிடம் கேட்ச் கொடுத்து அதிர்ச்சி அளித்தார். 

பின்னர் வந்த ராகுல் திரிபாதி, நிக்கோலஸ் பூரன் ஆகியோர் சில பந்துகளை எதிர்கொண்ட நிலையிலும் ரன் ஏதும் எடுக்காமல் டக் அவுட்டாகி அடுத்தடுத்து அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தனர். 

இதனால், பவர்பிளேவின் முடிவில் ஐதராபாத் அணி 3 விக்கெட்டுகளை இழந்து, வெறும் 12 ரன்களுக்கு மட்டுமே எடுத்தது.

பின்னர் தொடக்க வீரர் அபிஷேக் சர்மா  9 ரன்களில் ஆட்டமிழந்தார். இப்படியாக, ஐதராபாத் அணி 29 ரன்களுக்கு 4 விக்கெட்களை இழந்து தட்டு தடுமாறிப்போனது. 

அதன் பிறகு களமிறங்கிய மார்க்ரம், வாஷிங்டன் சுந்தர் ஜோடி சற்று நிலைத்து நின்று விளையாடிய நிலையில், தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் மட்டும் 14 பந்துகளில் 40 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். எனினும், ஐதராபாத் அணியானது 20 ஓவர்கள் முடிவில் மொத்தமாக 7 விக்கெட் இழப்பிற்கு 149 ரன்கள் மட்டுமே எடுத்து படுதோல்வியை தழுவியது. 

முக்கியமாக, ராஜஸ்தான் பந்துவீச்சு தரப்பில் சாஹல் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தி இருந்தார். இதன் மூலமாக, டி20 கிரிக்கெட்டில் சாஹல் வீசிய 250 வது விக்கெட் அது என்பது குறிப்பிடத்தக்கது. 

மிக முக்கியமாக, ஐபிஎல் வரலாற்றில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியானது, மாஸான வெற்றியுடன் புள்ளி பட்டியலில் முதல் இடத்தில் கொடி நாட்டி உள்ளது.