#IPL2022 சீசனின் நேற்றைய போட்டியில், பட்லர் அதிவேக சதம் அடித்து விளாச, சஹால் சுழல் புயலாக மாற, மறுபுறம் உமேஷ் யாதவ் காட்டடி என்று, கடைசி வரை விறுவிறுப்பாக சென்ற போட்டியில், கொல்கத்தாவை வீழ்த்தி, ராஜஸ்தான் த்ரில் வெற்றி பெற்றது.

#IPL2022 சீசினன் லீக் போட்டிகள் தற்போது நடைபெற்றுக்கொண்டு இருக்கிறது. இதில், நேற்று நடைபெற்ற போட்டியில் #RR v #KKR அணிகள் மோதின.

இதில், டாஸ் வென்ற #KKR கொல்கத்தா அணியின் கேப்டன் ஷ்ரேயஸ் அய்யர் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி, முதலில் களமிறங்கிய #RR ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக ஜாஸ் பட்லர் - தேவ்தத் படிக்கல் களமிறங்கி வந்த வேகத்தில் வெறும் பவுண்டரிகளாக விளாசி தள்ளினார்கள்.

அப்போது, மிகவும் அதிரடியாக விளையாடிய ஜாஸ் பட்லர் 29 பந்துகளில் அரைசதம் அடித்து அசத்திய நிலையில், மறு முனையில் தேவ்தத் படிக்கல் 17 பந்துகளில் 23 ரன்கள் அடித்து அவுட்டானார்.

பின்னர் வந்த சஞ்சு சாம்சன், பட்லர் உடன் ஜோடி சேர்ந்து இவரும் பவுண்டரிகளாக மிரட்டிக்கொண்டிருந்த நிலையில், 19 பந்துகளில் 38 ரன்கள் சேர்த்து சாம்சன் வெளியேறினார். ஆனால், களத்தில் சூராவளியாய் அதிரடி காட்டிக்கொண்டிருந்த பட்லர் 59 பந்துகளில் சதம் அடித்து அசத்தினார். 

இதன் மூலம், #IPL2022 நடப்பு ஐபிஎல் தொடரில் 2 வது சதத்தை ஜாஸ் பட்லர் பூர்த்தி செய்தார். அத்துடன், 61 பந்துகளில் 103 குவித்து  ஜாஸ் பட்லர் அவுட்டானார். இப்படியாக, #RR அணியானது 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு அதிக பட்சமாக 217 ரன்கள் குவித்து தள்ளியது. 

பின்னர், 218 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் #KKR கொல்கத்தா அணி சார்பில் தொடக்க வீரராக களமிறங்கிய நரேன், ரன் ஏதும் எடுக்காமல் ரன் அவுட்டாகி அதிர்ச்சி அளிக்க, பின்ச் உடன் ஜோடி சேர்ந்த #KKR கேப்டன் ஷ்ரேயஸ் அய்யர், சற்று அதிரடியாகவே விளையாடி ஸ்கோரை உயர்த்திக்கொண்டிருந்தார்.

அதிரடியாக விளையாடிய அவர்கள் இருவரும், அரைசதம் கடந்து அதிரடி காட்டிக்கொண்டிருந்த நிலையில், ஆரோன் பின்ச் 58 ரன்கள் சேர்த்து வெளியேறிய நிலையில், மறுமுனையில் ஷ்ரேயஸ் அய்யர் தனது அதிரடியால் தொடர்ந்து மிரட்டிக்கொண்டிருந்தார். அப்போது வந்த நிதிஷ் ராணா 18 ரன்களில் வெளியேறி அதிர்ச்சி அளித்தார். 

இப்படியாக, ஒரு புறம் விக்கெட்கள் சரிந்தாலும் மற்றொரு புறம் ஷ்ரேயஸ் அய்யர் வெறும் சிக்சர், பவுண்டரிகளாக தெறிக்கவிட்டுக்கொண்டிருந்தார். 

அப்போது, 17 வது ஓவரை யுஸ்வேந்திர சஹால் வீசிய புயல் வேக சுழலில், அந்த ஒரே ஓவரில் ஷ்ரேயஸ் அய்யர் கம்மின்ஸ் , மாவி விக்கெட்களை ஹாட்ரிக் விக்கெட்டுகளாக வீழ்த்தி அசத்தினார். இதனால், ஷ்ரேயஸ் அய்யர் 85 ரன்களில் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். 

இதனால், #KKR கொல்கத்தா அணி பக்கம் சென்ற ஆட்டம் மெல்ல #RR அணியின் பக்கம் திரும்பியது. 

அப்போது, களத்திற்கு வந்த உமேஷ் யாதவ், அடுத்தடுத்து 2 சிக்ஸர் மற்றும் ஒரு பவுண்டரியை விளாசி 5 ரன்னில் 18 ரன்கள் சேர்த்தார். இதனால், #KKR கொல்கத்தா அணி பக்கம் திரும்பியது. 

குறிப்பாக, உமேஷ் யாதவ் 9 பந்துகளில் 21 ரன்களை அடித்து அசத்தினார். அப்போது, கடைசி ஓவரில் #KKR வெற்றிக்கு 11 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், #KKR 19.4 ஓவர்களில் 210 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதனால், கடைசி ஓவர் வரை விறுவிறுப்பாக சென்ற இந்த ஆட்டத்தில் #RR அணி திரில் வெற்றிப் பெற்று அசத்தியது.

இந்த போட்டியில், #RR  ராஜஸ்தானின் மாபெரும் ஆயுதமாக பட்லரும், தடுப்பு கேடயமாக சஹாலும் மிரட்டியதால், #RR சூப்பரான வெற்றியை பதிவு செய்தது.